இந்தியாவில் 22 கோடி பேர் பட்டினி.. பணக்காரர்கள் கடன்களை தள்ளுபடி செய்த மோடி அரசு.. திருச்சி சிவா சுளீர்

Apr 15, 2024 - 12:36
Apr 15, 2024 - 12:48
இந்தியாவில் 22 கோடி பேர் பட்டினி.. பணக்காரர்கள் கடன்களை தள்ளுபடி செய்த மோடி அரசு.. திருச்சி சிவா சுளீர்

பெரும் பணக்காரர்கள் கடனாக பெற்ற ரூ.10 ஆயிரம் கோடியை தள்ளுபடி செய்த மோடி அரசு, கல்விக் கடனையும், விவசாயக்கடனை தள்ளுபடி செய்யவில்லை என்று திமுக எம்.பி திருச்சி சிவா குற்றம் சாட்டியுள்ளார்.

வரும் 19ஆம் தேதி தமிழ்நாட்டில் மக்களவைத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. 17ஆம் தேதியுடன் தேர்தல் பிரசாரம் ஓயப்போகிறது. இறுதிக்கட்ட பிரசாரத்தில் அரசியல் தலைவர்கள் ஈடுபட்டுள்ளதால் தேர்தல் களத்தில் அனல் பறக்கிறது.

சிவகங்கை மாவட்டம் திருப்புவனத்தில் சிவகங்கை நாடாளுமன்ற காங்கிரஸ் வேட்பாளர் கார்த்திக் சிதம்பரத்தை ஆதரித்து திமுக எம்.பி திருச்சி சிவா பரப்புரை மேற்கொண்டார். அப்போது அவர் பேசும் போது, “அண்ணனாய், தம்பியாய் வாழுகின்ற மதசார்பற்ற நாடாக இந்தியா இருக்குமா?அல்லது ஒற்றை மதம் எல்லோரையும் ஆக்கிரமிக்கும் நிலை வருமா? ஹிந்தி என்ற ஒற்றை மொழி ஆதிக்கம் செலுத்துமா? என்பதை தீர்மானிக்கின்ற தேர்தல் இது  என்று பாஜக அரசை விமர்சித்துப் பேசினார்.

தொடர்ந்து பேசிய அவர், “ரூ14 லட்சம் கோடி GST வரி வருவாயில், குறைந்த அளவில்தான் பணக்காரர்கள் தந்தது. அதில் பெரும் பணக்காரர்கள் கடனாக பெற்ற ரூ10 ஆயிரம் கோடியையும் மோடி அரசு தள்ளுபடி செய்து அவர்களை பாதுகாக்கிறது என்றார் திருச்சி சிவா. அதே நேரத்தில் மாணவர்களின் கல்விக்கடனையும், விவசாயக் கடனையும் தள்ளுபடி செய்யவில்லை.

இந்தியாவில் 22 கோடி பேர் இரவில் பட்டினியுடன் படுக்க செல்கின்றனர். கடந்த ஓராண்டில் மட்டும் 11,502 விவசாயிகள் தற்கொலை செய்து கொண்டனர். எனவே இந்தத் தேர்தலில் நாம் ஏமாந்து போனால் இனி மீட்பதற்கு வழியே இல்லை என்றும் திருச்சி சிவா கடுமையான குற்றச்சாட்டுகளை முன்வைத்தார்.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow