Spider Man-ஐ Seen Zone செய்த எர்லிங் ஹாலண்ட்... இணையத்தில் வைரலாகும் Convo..!
ஹாலிவுட் நடிகர் டாம் ஹாலண்ட் மற்றும் நார்வே கால்பந்து நட்சத்திரம் எர்லிங் ஹாலண்ட் இடையே நடைபெற்ற சுவாரஸ்யமான சமூக வலைதள உரையாடல் தற்போது இணையத்தில் வைரலாகி ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது.
ஸ்பைடர் மேன் கதாபாத்திரத்தின் மூலம் உலகம் முழுவதும் பிரபலமான டாம் ஹாலண்ட், சில நாட்களுக்கு முன்பு எர்லிங் ஹாலண்டுக்கு இன்ஸ்டாகிராம் டிஎம் (Direct Message) மூலம், "ஒருநாள் ஒன்றாக உணவருந்தலாம்" என்ற வகையில் அழைப்பு விடுத்திருந்தார்.
ஆனால், அந்த மெசேஜுக்கு எர்லிங் ஹாலண்ட் எந்த பதிலும் அளிக்கவில்லை. இதுகுறித்து சமீபத்தில் நடைபெற்ற பேட்டி ஒன்றில் பேசிய டாம் ஹாலண்ட், "நான் அவருக்கு மெசேஜ் அனுப்பினேன். ஆனால் அவர் அதை பார்த்தும் பதில் அளிக்கவில்லை" என்று சிரிப்புடன் தெரிவித்திருந்தார். இந்த பேட்டி சமூக வலைதளங்களில் வேகமாக பரவி ரசிகர்களிடையே பேசுபொருளானது.
இதற்கு தற்போது விளக்கம் அளித்துள்ள எர்லிங் ஹாலண்ட், "டாம் ஹாலண்ட் யார் என்பது எனக்குத் தெரியாது. அதனால்தான் அந்த மெசேஜுக்கு பதில் அளிக்கவில்லை. பின்னர்தான் அவர் உலகப் புகழ்பெற்ற நடிகர் என்பதை தெரிந்துகொண்டேன்" என்று கூறியுள்ளார். மேலும், டாம் ஹாலண்டுடன் இணைந்து உணவருந்தும் அழைப்பை தற்போது ஏற்றுக்கொள்வதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
இந்த சம்பவம் ரசிகர்களிடையே சிரிப்பை ஏற்படுத்தியுள்ளது. "உலகப் புகழ்பெற்ற ஸ்பைடர் மேனையே 'Seen Zone' செய்த ஒரே நபர் எர்லிங் ஹாலண்ட்" என்றும், "டாம் ஹாலண்ட் மற்றும் ஹாலண்ட் சந்திப்பு எப்போது?" என்றும் சமூக வலைதளங்களில் பலரும் நகைச்சுவையான பதிவுகளை பகிர்ந்து வருகின்றனர்.
இரண்டு துறைகளின் உலக நட்சத்திரங்களான டாம் ஹாலண்ட் மற்றும் எர்லிங் ஹாலண்ட் விரைவில் நேரில் சந்திப்பார்களா என்ற எதிர்பார்ப்பும் ரசிகர்கள் மத்தியில் அதிகரித்துள்ளது.
What's Your Reaction?



