சினிமான்னா என்னன்னே தெரியாம நிறைய பேர் வந்துடுறாங்க.. வனிதா விஜயகுமார்!

’Mrs & Mr' படத்தின் மூலம் இயக்குநர் அவதாரம் எடுத்துள்ள வனிதா விஜயகுமார் குமுதம் வாசகர்களுக்காக வழங்கிய நேர்காணலில் தனது மகளின் திரைப்பயணம் குறித்து பல்வேறு தகவல்களை பகிர்ந்துள்ளார்.

சினிமான்னா என்னன்னே தெரியாம நிறைய பேர் வந்துடுறாங்க.. வனிதா விஜயகுமார்!
vanitha vijayakumar discusses daughter jovika entry into cinema

’Mrs & Mr' படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமாகி உள்ளார், நடிகை வனிதா விஜயகுமார். தனது முன்னாள் கணவரும், நடன இயக்குநருமாகிய ராபர்ட்டுடன் மீண்டும் மணக்கோலத்தில் இந்தப் படத்தின் ஃபர்ஸ்ட் லுக்கை வெளியிட்டு, பரபரப்பைப் பற்றவைத்தார். இப்படத்தின் தயாரிப்பாளராக வனிதா விஜயகுமாரின் மகள், ஜோவிகா பெயர் இடம்பெற்றது.

கடந்த வாரம் படம் ரிலீஸான நிலையில், ஜோவிகாவை ஹீரோயினாக்குவீங்கன்னு பார்த்தா, தயாரிப்பாளரா களம் இறக்கியிருக்கீங்களே? என நாம் எழுப்பிய கேள்விக்கு வனிதா விஜயகுமார் அளித்த பதில் பின்வருமாறு.

"எல்லாத்துக்குமே ஒரு நேரம் இருக்கு. அவ ரொம்ப சின்னப்பொண்ணு. அறிமுகங்கிறது எல்லாருக்குமே ரொம்ப முக்கியம். அதனால, சரியான புராஜெக்ட்ல அறிமுகப்படுத்தணும்னு ஆசைப்படுறேன். சினிமான்னா என்னன்னே தெரியாம நிறைய பேர் சினிமாவுக்குள்ள வந்துடுறாங்க. அவங்க கத்துக்கிறதுக்குள்ள, சினிமா அவங்களை வெளியில துரத்திடும். அதனால, இப்பவே அவளைத் தயார் பண்றேன். ஒரு தயாரிப்பாளர் படுற கஷ்டங்கள் என்னென்ன, ஒரு நடிகரா தயாரிப்பாளருக்கு நாம எப்படி ஒத்துழைக்கணும்னு இப்ப அவங்களுக்குப் புரிஞ்சிருக்கும். அதேமாதிரி, முதல் படத்துலயே அவார்டு வாங்குற அளவுக்கு எல்லாரும் நடிச்சிட முடியாது. அதனால், அனுபம் கெர் இன்ஸ்டிட் டியூட்'ல ஆக்டிங் கோர்ஸ் படிச்சிருக்காங்க. அப்புறம், 'டீன்ஸ்' படத்துல பார்த்திபன் சார்கிட்ட உதவி இயக்குநரா வேலை பார்த்தாங்க. அவ்வளவு பெரிய இயக்குநர்கிட்ட ஒர்க் பண்ணும்போது நிறைய கத்துக்கலாம்.

Read more: ஷகீலா கிரியேட்டிவான ஆள்.. நான் இயக்குநரானது என் தலையெழுத்து: வனிதா விஜயகுமார்!

அதேமாதிரி, இண்டஸ்ட்ரின்னா இப்படித்தான் இருக்கும், இத்தனை பேரை சமாளிக்கணும், நிறைய விமர்சனங்கள் வரும்; அதையெல்லாம் சமாளிச்சு, ஜெயிச்சு வரும்போது, நிறைய அன்பும் கிடைக்கும்கிற விஷயத்தையும் 'பிக் பாஸ்' மூலம் அவ புரிஞ்சிகிட்டா. இந்தப் படத்துல அவ தயாரிப்பாளர் மட்டுமல்ல... டைரக்ஷன், போஸ்ட் புரொடக்ஷன், டப்பிங், புரமோஷன்னு எல்லாத்துலயும் வேலை பார்த்துருக்கா.

10 படங்கள்ல நடிச்ச அனுபவத்தை, இந்த ஒரு படம் அவளுக்கு கொடுத்துருக்கு. இப்போ, தெலுங்குல அவளை ஹீரோயினா அறிமுகப்படுத்த போறேன். ஒரு படத்துல அவளை கமிட் பண்ணியிருக்காங்க. இன்னும் ஷூட்டிங் ஸ்டார்ட் பண்ணல. மிகப்பெரிய தயாரிப்பு நிறுவனம். பர்ஃபாமன்ஸ் ஓரியன்டட் ரோல்தான். தமிழ்லயும் அதுமாதிரி நல்ல வாய்ப்பு வர்றதுக்காகக் காத்திருக்கோம்” என குறிப்பிட்டார்.

(கட்டுரையாளர்: காவேரி மாணிக்கம், படங்கள்: கே.கஸ்தூரி / குமுதம் / 23.07.2025)

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow