"பைல் ஓபன் பண்ண ஜோசியம் பார்க்கணுமா? " - விஜய்க்கு உதய் கேள்வி!

தமிழ்நாடு சட்டசபையில் இன்று எரிசக்தித்துறை மற்றும் இந்து சமய அறநிலையத்துறை மீதான மானியக் கோரிக்கைகள் குறித்து விவாதம் நடைபெற்றது. இதில் ஆளுங்கட்சியான திமுக மற்றும் தவெக உறுப்பினர்களுக்கு இடையே காரசாரமான வாக்குவாதம் ஏற்பட்டது.

Aug 21, 2026 - 12:25
"பைல் ஓபன் பண்ண ஜோசியம் பார்க்கணுமா? " -  விஜய்க்கு உதய் கேள்வி!
udhayanidhi slams questions on cm vijay about 3 files

தமிழ்நாடு சட்டசபையில் இன்று எரிசக்தித்துறை மற்றும் இந்து சமய அறநிலையத்துறை மீதான மானியக் கோரிக்கைகள் குறித்து விவாதம் நடைபெற்றது. இதில் ஆளுங்கட்சியான திமுக மற்றும் தவெக உறுப்பினர்களுக்கு இடையே காரசாரமான வாக்குவாதம் ஏற்பட்டது.

நேற்றைய  தினம்  முதலமைச்சர் விஜய் " என் மேஜையில் 3 கோப்புகள் இருப்பதாகவும், அவற்றை திறக்க வைத்துவிடாதீர்கள்" என்று கூறியதற்கு, இன்றைய தினம் தொடக்கத்திலேயே “தயவு செய்து அந்தக் கோப்பை திறந்து பார்த்து நடவடிக்கை எடுக்க வேண்டும். எதற்காக பயப்படுகிறீர்கள்? ஏன் காலம் தாழ்த்துகிறீர்கள்?” என  எதிர்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் கேள்வி எழுப்பினார்.

மேலும், “ஜோதிடர் சொன்னால்தான் பைலை திறப்பீர்களா? நல்ல நேரம் பார்த்துக் கொண்டிருக்கிறீர்களா?” என எதிர்க்கட்சத் தலைவர் விமர்சித்தது சட்டசபையில் பரபரப்பை ஏற்படுத்தியது. தொடர்ந்து, நடவடிக்கை எடுப்பேன் என கூறப்படும் மிரட்டல்களுக்கு தாங்கள் பயப்படமாட்டோம் என்றும் தெரிவித்தார்.

இதனிடையே, சட்டசபை விவாதத்தின் போது ஆளுங்கட்சியினர் பாடல் பாடுவதாகவும் அவர் விமர்சித்தார். “நாங்கள் சட்டமன்றத்திற்கு வந்திருக்கிறோமா அல்லது சூப்பர் சிங்கர் நிகழ்ச்சிக்கு வந்திருக்கிறோமா என்ற சந்தேகம் ஏற்படும் அளவுக்கு பாட்டு நிகழ்ச்சி நடக்கிறது” என எதிர்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் கிண்டலாக குறிப்பிட்டார்.

மேலும், சட்டசபை அவைக்குறிப்பில் இருந்து நீக்கப்படும் கருத்துகள் பின்னர் சமூக வலைதளங்களில் ரீல்ஸ்களாக வெளியாகி வருவதாகவும் அவர் சுட்டிக்காட்டினார். “நான் பேசியதை அவைக்குறிப்பில் இருந்து நீக்கிவிட்டீர்கள். ஆனால் அது சமூக வலைதளங்களில் வெளியாகிறது. இதனால் கருத்துகளை அவைக்குறிப்பில் இருந்து நீக்குவதற்கே அர்த்தம் இல்லாமல் போய்விடுகிறது”  உதயநிதி ஸ்டாலின் தெரிவித்தார்.

இதனால் சட்டசபையில் ஆளுங்கட்சி மற்றும் தவெக உறுப்பினர்களுக்கு இடையே நடந்த இந்த காரசார விவாதம் அரசியல் வட்டாரத்தில் கவனம் பெற்றுள்ளது.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow