Weekly Rasipalan: இந்த வாரம் எந்தெந்த ராசிக்கு என்னென்ன பிரச்சினை காத்திருக்கு?

30.4.2025 முதல் 6.5.2025 வரையிலான ராசிபலன் விவரங்களை யதார்த்த ஜோதிடர் ஷெல்வீ குமுதம் வாசகர்களுக்காக கணித்து வழங்கியுள்ளார். அதன் விவரம் பின்வருமாறு.

Apr 30, 2025 - 12:37
Weekly Rasipalan: இந்த வாரம் எந்தெந்த ராசிக்கு என்னென்ன பிரச்சினை காத்திருக்கு?
weekly rasipalan for this week

மேஷம்: திறமைக்கும் திட்டமிடலுக்கும் ஏற்ப ஏற்றமும் மாற்றமும் வரக்கூடிய காலகட்டம். புதிய பொறுப்புகள் கூடுதலாக வாய்ப்பு உண்டு. பணி காரணமாக சிலருக்கு வெளிநாடு, வெளியூர் செல்லும் வாய்ப்பு வரும். வீட்டுல விசேஷங்கள் இடம்பிடிக்கும். களியாட்டம் தவிர்த்தா, கைப்பொருள் கரையாம இருக்கும். சிலர் வீடு மாறும் சந்தர்ப்பம் வரலாம். வாரிசுகளால் பெருமை சேரும். செய்யும் தொழில்ல சீரான வளர்ச்சி ஏற்படும். அரசியல், அரசுத் துறையினருக்கு ஆதரவு நிலைக்கும். வாகனப் பழுதை உடன் சீர் செய்யுங்க. தொற்றுப் பிரச்னை. அஜீரணம், தூக்கமின்மை உபாதைகளை கவனியுங்க. இஷ்ட அம்மனைக் கும்பிடுங்க. எண்ணங்கள் ஈடேறும்.

ரிஷபம்: உழைப்பதில் உறுதியாக இருந்தால் உயர்வுகளுக்கு உத்தரவாதம் கிட்டும் காலகட்டம். பணியிடத்துல திட்டமிடலும் நேரம் தவறாமையும் ரொம்பவே அவசியம். குடும்பத்துல குதர்க்கம் தவிர்க்கணும். வாழ்க்கைத் துணையுடன் அன்யோன்யம் அதிகரிக்கும். செலவுக்கு ஏற்ப வரவும் இருக்கும். விலை உயர்ந்த பொருட்களை பத்திரமா வெச்சுக்குங்க. செய்யும் தொழில்ல சீரான லாபம் கிட்டும். புதிய முதலீடுகள்ல நிதானம் அவசியம். அரசு, அரசியல் துறையினர்க்கு ஆதரவு நிலைக்கும். ஜாமீன், ஜவாப் கையெழுத்துகள் போடுவதை இயன்றவரை தவிருங்க. மூட்டு, நரம்பு, கழுத்து உபாதைகள் வரலாம். தட்சிணாமூர்த்தியைக் கும்பிடுங்க. வாழ்க்கை தழைக்கும்.

மிதுனம்: அமைதியாகச் செயல்படுவது ஆனந்தத்தை அதிகரிக்கும் காலகட்டம். அலுவலகத்துல வீண் படபடப்பும் பரபரப்பும் தவிருங்க. இடமாற்றம் வந்தா, தவிர்க்காம ஏற்றுக்குங்க. வீட்டுல ஒற்றுமை உருவாகும். புதிய வரவு, உறவால மகிழ்ச்சி நிறையும். இளம் வயதினர் பெற்றோருடன் மனம்விட்டுப் பேசுங்க. வாரிசுகளிடம் கடுமை தவிர்த்து கனிவா பேசுங்க. வாழ்க்கைத் துணைவர் வார்த்தைகளுக்கு மதிப்பு கொடுங்க. சகோதர உறவுகளுடன் சச்சரவு தவிருங்க. அயல்நாட்டு வர்த்தகம் ஆதாயம் தரும். அரசு, அரசியல் துறையினர், கோப்புகள்ல கையெழுத்திடும்போது கவனமா இருங்க. வாகனத்துல வேகம் தவிருங்க. அடிவயிறு முதல் பாதம் வரையான உறுப்புகள்ல பிரச்னை வரலாம்க. இஷ்ட மகானைக் கும்பிடுங்க. வாழ்க்கை மணக்கும்.

கடகம்: தன்னம்பிக்கையும் தைரியமும் அதிகரிக்கும்| காலகட்டம். அலுவலகத்துல அனுகூலமான சூழல் உருவாகும். உடனிருக்கும் யாரையும் உதாசீனப் படுத்த வேண்டாம். குடும்பத்துல விசேஷங்கள் வரத்தொடங்கும். உங்க பேச்சுல கனிவு இருந்தா சுபகாரியங்கள் கைகூடி வரும். பிறமொழி மனிதர்களிடம் எல்லை வகுத்துப் பழகுங்க. செய்யும் தொழில்ல சீரான வளர்ச்சி உருவாகும். புதிய முதலீடுகளை நேரடியா செய்யணும். அரசு, அரசியல் சார்ந்தவங்க பொது இடங்கள்ல வாக்குறுதிகள்ல அலட்சியம் கூடாதுங்க. வாகனப் பழுதை உடனுக்குடன் சரி செய்யுங்க. பற்கள், அஜீரணம், பூச்சிக்கடி, தலைவலி உபாதைகள் வரலாம். சிவன் பார்வதி முருகனைக் கும்பிடுங்க. வாழ்க்கை சீராகும் சிறக்கும்.

சிம்மம்

கவனமாகச் செயல்பட்டால், இஷ்டங்கள் ஈடேறும் காலகட்டம்க. அலுவலகத்துல உங்க திறமை உணரப் படும்க. அதேசமயம் நாவடக்கம்தான் நன்மைகளை நிலைக்கச் செய்யும்க. குடும்பத்துல இணக்க சூழல் உருவாகும்க. வாழ்க்கைத் துணையுடன் வாக்குவாதம் வேண்டாம்க. சகோதர உறவுகளால் ஆதாயம் கிட்டும்க. பூர்வீக சொத்துல விட்டுக் கொடுத்துப் போறது நல்லுதுங்க. செய்யும் தொழில்ல சோம்பலுக்கு இடம்தர வேண்டாம்க. அரசு, அரசியல் துறையினர் நிதானத்தைக் கடைப்பிடிங்க. பயணப்பாதையில வீண் களியாட்டம் வேண்டாம்க. பிறர் தரும் உணவு, பானம் தவிருங்க. காது, மூக்கு, தொண்டை, அல்சர் உபாதைகள்ல கவனமா இருங்க. பைரவரைக் கும்பிடுங்க. வாழ்க்கை பசுமையாகும்.

கன்னி

தலைகனத்தைத் தவிர்த்தா, தலை உயர்ந்து நடக்கும் காலகட்டம்க. அலுவலகத்துல திட்டமிடலும் நேரம் தவறாமையும் முக்கியம்க. முகஸ்துதி நபர்களை முதல்வேலையா விலக்குங்க. குடும்பத்துல நிம்மதி வெளிச்சம் நிறையும்க. தம்பதியரிடையே இருந்த மனக்கசப்பு நீங்கும்க. இந்த சமயத்துல குதர்க்கமும் குத்திக்காட்டலும் வேண்டாம்க. குடும்பத்துல மூன்றாம் நபர் தலையீட்டை கனவிலும் அனு மதிக்க வேண்டாம்க. செய்யும் தொழில்ல சீரான போக்கு நிலவும்க. அரசு, அரசியல் துறையினர், பொறுமையால் பெருமை பெறலாம்க. இரவுப் பயணத்தை இயன்ற வரை தவிருங்க. கழுத்து, தோள்பட்டை உபாதைகள் வரலாம்க. துர்க்கையை வணங்குங்க. வாழ்க்கை துளிர்க்கும்.

விருச்சிகம்

உழைப்பதில் சோம்பல் தவிர்த்தால், உயர்வுகள் வரக்கூடிய காலகட்டம்க. பணியிடத்துல உங்க திறமைக்கு உரிய பெருமை நிச்சயம் கிட்டும்க. வீட்டுல விசேஷங்கள் வரத் தொடங்கும்க. வீடு, வாகனம் புதுப்பிக்க சந்தர்ப்பம் அமையும். விலகி இருந்த உறவுகள் வீடு தேடி வரும்க. பெற்றோர், பெரியோர் உடல்நலம் சீராகும்க. செய்யும் தொழில் படிப்படியா வளர்ச்சி பெறும்க. புதிய ஒப்பந்தங்களை கவனமா செய்யுங்க. அரசு, அரசியல் துறையினருக்கு உயர்வுகள் உருவாகும்க. வார்த்தைகள்ல பணிவு இருந்தா வாழ்க்கைல மேன்மை வரும்க. பயணத்துல வேகம் வேண்டாம்க.ஒற்றைத் தலைவலி, எலும்பு, மன அழுத்த உபாதை வரலாம்க. அரங்கனைக் கும்பிடுங்க. ஆனந்தம் பெருகும்.

துலாம்

சுறுசுறுப்பாகச் செயல்பட்டா, சுபிட்சங்கள் அதிகரிக்கும் கால கட்டம்க. பணியிடத்துல பொறுப்பு உணர்வு அவசியம்க. சிலருக்கு இடமாற்றம், பதவி மாற்றம் வரலாம்க. அது எதிர்கால ஏற்றத்துக்கு உதவும், தவிர்க்க வேண்டாம்க. குடும்பத்துல ஒற்றுமை |அதிகரிக்கும்க. வீடு, வாகனம் புதுப்பிக்க நேரம் அமையும்க. குடும்ப ரகசியங்களை யாரிடமும் பகிர்ந்துக்க வேண்டாம்க. தினமும் சிறிது நேரமாவது தியானம்,யோகா செய்வது நல்லதுங்க. அரசு, அரசியல் |சார்ந்தவங்களுக்கு பாராட்டு, பெருமைகள் கிட்டும்க. தொலைதூரப் பயணத்தை பகல்ல தொடங்குங்க. ஒற்றைத் தலைவலி, அலர்ஜி, பூச்சி தொல்லைகள் வரலாம்க. உணவை முறைப்படுத்துங்க. மாருதியைக் கும்பிடுங்க. வாழ்க்கை மணக்கும்.

தனுசு

எல்லாம் தெரியும் நினைவு தவிர்த்தா, நடப்பவை நல்லவையாகும் காலகட்டம்க. அலுவலகத்துல தேவையற்ற பதற்றமும் வேண்டாத வாதமும் கூடாதுங்க. கோப்புகள்ல கவனத்துடன் கையெழுத் திடுங்க. குடும்பத்துல உறவுகளுடன் விட்டுக் கொடுத்தல் முக்கியம்க. பிறர் பிரச்னைக்கு பஞ்சாயத்து பேச மூக்கை நுழைக்க வேண்டாம்க. புதிய நபர்களிடம் நெருக்கம் தவிருங்க. செய்யும் தொழில்ல புதிய முயற்சிகளை ஒத்திவையுங்க. அரசு, அரசியல் சார்ந்தவங்க மறைமுக எதிரிகளிடம் எச்சரிக்கையா இருங்க. அடிவயிறு, முதுகு, பாதம் உபாதைகள் வரலாம்க. வேலவனைக் கும்பிடுங்க. விசேஷங்கள் நடக்கும்.

மகரம்

சாதகங்கள் அதிகரிக்கக் கூடிய காலகட்டம்க. அலுவலகத்துல எதிர்பார்த்த மேன்மைகள் கைகூடிவரும்க. பொறுப்பு உணர்வுடன் செயல்படுவது நல்லதுங்க. வீட்டில் நிம்மதி நிலவத்தொடங்கும்க. வாழ்க்கைத் துணையுடன் வாக்குவாதம் தவிருங்க. வாரிசுகளால் பெருமை சேரும்க. குலதெய்வத்தை தினமும் சிறிது நேரமாவது கும்பிடுங்க. ஆடை, ஆபரணம் சேரும்க. செய்யும் தொழில்ல லாபம் சீராகும்க. அரசு, அரசியல் சார்ந்தவங்க அமைதியாக இருப்பதுதான் நல்லதுங்க. கலைஞர்களுக்கு வாய்ப்புகள் தேடிவரும்க. சட்ட நடைமுறைகளை முழுமையா மதிச்சு நடங்க. நரம்பு, மூட்டு, பற்கள் உபாதை வரலாம்க. வேழமுகனைக் கும்பிடுங்க. வேண்டியவை நடக்கும்.

கும்பம்

அமைதியாகச் செயல்பட்டா ஏற்றமும் மாற்றமும் வரக்கூடிய காலகட்டம்க. அலுவலகத்துல உங்க திறமை நிச்சயம் உணரப்படும்க. பதவி, இடமாற்றம் தாமதமாவதை நினைச்சு, வீண் புலம்பல் வேண்டாம்க. வீட்டுல விட்டுக் கொடுத்தல் முக்கியம்க. சுபகாரியச் செலவுகள் அதிகரிக்கலாம்க. வரவை சீராக செலவிடவும், திட்டமிட்டு சேமிக்கவும் பழகுங்க. செய்யும் தொழில்ல நேரடி கவனமும் நேர்மையும் முக்கியம்க. அரசு, அரசியல் சார்ந்தவங்க யாருக்கும் ஜாமீன், வாக்குறுதி தரவேண்டாம்க. கலைஞர்கள் முயற்சிக்குப் பலன் பெறலாம்க. மூட்டுகள், நரம்பு, அலர்ஜி, சுளுக்கு பிரச்னைகள் வரலாம்க. நரசிம்மரைக் கும்பிடுங்க. நல்லவை நடக்கும்.

மீனம்

பொறுப்பு உணர்வுடன் செயல்பட்டா, பெருமைகள் நிலைக்கும் காலகட்டம்க. அலுவலகத்துல அலட்சியமும் அவசரமும் கூடாதுங்க. பொறுப்புகளை நேரடியா கவனியுங்க. இல்லத்துல இனிய சூழல் நிலவும்க. விலகி இருந்த உறவும் நட்பும் உங்க பெருமை பேசத்தொடங்கும்க. பணவரவை சேமிக்கறது நல்லதுங்க. தரல், பெறல் எதையும் உடனுக்குடன் குறிச்சு வையுங்க. அரசு, அரசியல் சார்ந்தவங்க பொது இடங்கள்ல வாக்குறுதி தரும் முன் ஒரு முறைக்கு இருமுறை யோசிக்கறது நல்லதுங்க. செய்யும் தொழில்ல உழைப்புக்கு ஏற்ப லாபம் அதிகரிக்கும்க. வர்த்தகச் சட்டங்களை முழுமையா கடைப்பிடிங்க. கலைத்துறையினர் கர்வம் தவிர்த்து செயல்படறது நல்லதுங்க. அஜீரணம், ரத்த நாள உபாதை, கழிவு உறுப்புப் பிரச்னைகள் வரலாம்க. சுதர்சனரைக் கும்பிடுங்க. சுபிட்சங்கள் தொடரும்.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow