மனைவியை காணோம்.. ஹேபியஸ் கார்பஸ் போட்ட நபர்.. நேரத்தை வீணடிக்காதீங்க.. ஃபைன் போட்ட நீதிபதி

வீணாக ஆட்கொணர்வு மனு அளித்து நீதிமன்றத்தின் நேரத்தை வீணடித்த நபர்...

May 11, 2024 - 17:08
மனைவியை காணோம்.. ஹேபியஸ் கார்பஸ் போட்ட நபர்.. நேரத்தை வீணடிக்காதீங்க.. ஃபைன் போட்ட நீதிபதி

உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் வீணாக ஆட்கொணர்வு மனு கொடுத்து நீதிமன்றத்தின் நேரத்தை வீணடித்த சேர்ந்த நபருக்கு அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. 

ராமநாதபுரத்தைச் சேர்ந்த  பாண்டியன் உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் ஆட்கொணர்வு மனுவைத் தாக்கல் செய்திருந்தார்.

அந்த மனுவில், " தனக்கும் அழகம்மாள் என்பவருக்கும் கடந்த 2019ல் திருமணம் ஆன நிலையில் பெண் குழந்தை ஒன்று உள்ளது. கடந்த ஏப்ரல் 1ஆம் தேதி வேலைக்கு சென்று விட்டு வீடு திரும்பிய போது தனது மனைவியையும், குழந்தையையும் காணவில்லை. ஆகவே அவர்களை மீட்டு ஆஜர்படுத்த உத்தரவிட வேண்டும்" எனக் கூறியிருந்தார்.

இந்த வழக்கு நீதிபதிகள் ஜெகதீஷ் சந்திரா, ராஜசேகர் அமர்வு முன்பாக விசாரணைக்கு வந்தது. அப்போது அரசு தரப்பில் இருந்து விளக்கமளிக்கப்பட்டது.  அதில், "அழகம்மாள்  வீட்டை விட்டு வெளியேறி சென்னையில் உள்ள தனது சகோதரியின் வீட்டில் வசித்து வருகிறார் என்றும், அது மனுதாரருக்கும் தெரியும்" எனவும் தெரிவிக்கப்பட்டது.

இதனை பதிவு செய்து கொண்ட நீதிபதிகள், வீணாக ஆட்கொணர்வு மனு அளித்து நீதிமன்றத்தின் நேரத்தை வீணடித்தற்காக ரூ.5ஆயிரம் அபராதமாக செலுத்தவேண்டும் என்று உத்தரவிட்டு வழக்கை முடித்து வைத்தனர். அத்துடன் அபராத தொகையை மதுரைக்கிளையின் சட்டப் பணிகள் ஆணையத்திற்கு 4 வாரத்திற்குள்ளாக செலுத்த வேண்டும்" எனவும் தெரிவித்தனர்.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow