IPL:ரிஷப் பண்ட் ஒரு போட்டியில் விளையாட தடை.. மொத்த அணிக்கும் ஆப்பு வைத்த BCCI !

ரிஷப் பண்ட் மட்டுமில்லாமல், அந்த போட்டியில் விளையாடிய அனைத்து டெல்லி பிளேயர்களுக்கும் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

May 11, 2024 - 17:01
IPL:ரிஷப் பண்ட் ஒரு போட்டியில் விளையாட தடை.. மொத்த அணிக்கும் ஆப்பு வைத்த BCCI !

நடப்பாண்டு ஐபிஎல் தொடரில் 3 முறை டெல்லி அணி மெதுவாக பந்துவீசியதால், அணியின் கேப்டன் ரிஷப் பண்ட் ஒரு போட்டியில் விளையாட தடை விதிக்கப்பட்டுள்ளது. 

2024 IPL போட்டிகள் விறுவிறுப்பான கட்டத்தை எட்டியுள்ளது. ராஜஸ்தான், கொல்கத்தா அணிகள் ப்ளே ஆஃப் வாய்ப்பை உறுதி செய்துவிட்டன. மீதமுள்ள 2 இடங்களுக்கு இடையே தான் போட்டியே. இதில் மும்பை, பஞ்சாப் அணிகள் ப்ளே ஆஃப் செல்லும் வாய்ப்பை இழந்துவிட்டன. 

இதனால் மீதமுள்ள 6 அணிகளுக்கு இடையே 2 இடங்களை கைப்பற்றுவது தொடர்பான அதிதீவிர போர் நடந்து வருகிறது. இதனாலேயே போட்டிக்கு போட்டி சுவாரஸ்யம் அதிகரிக்கிறது. 

இந்நிலையில், விபத்து காரணமாக 2 ஆண்டு ஓய்வுக்கு பின் நேரடியாக டெல்லி அணியின் கேப்டனாக பொறுப்பேற்று அதிரடி காட்டி வரும் ரிஷப் பண்டுக்கு புதிய சிக்கல் வந்துள்ளது. பெரும் விபத்தில் இருந்து மீண்டவர் என்ற ஒரு சிறிய தொய்வு கூட இல்லாமல் அற்புதமாக ஆடி வருகிறார் பண்ட். 

டெல்லி கடைசியாக ராஜஸ்தான் அணிக்கு எதிராக விளையாடிய போட்டியில் மெதுவாக பந்துவீசியதாக குற்றம்சாட்டப்பட்டு ரிஷப் பண்ட்டுக்கு ரூ.30 லட்சம் அபராதமும், ஒரு போட்டியில் விளையாடவும் தடையும்  விதிக்கப்பட்டுள்ளது. மொத்தமாக 3 போட்டிகளில் இவ்வாறான சொதப்பல்கள் நடந்துள்ளதால் பிசிசிஐ இத்தகைய கடும் உத்தரவை பிறப்பித்துள்ளது. 

தொடர்ந்து ரிஷப் பண்ட் மட்டுமில்லாமல், அந்த போட்டியில் விளையாடிய அனைத்து டெல்லி பிளேயர்கள், இம்பேக்ட் பிளேயர் வரை அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. அவர்களுக்கு ரூ.12 லட்சம் அல்லது போட்டி தொகையில் இருந்து 50சதவீதம் வரை விதிக்கப்பட்டுள்ளது.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow