தலைமை ஆசிரியரிடம் செயின் பறிப்பு- தந்தை,மகன் கைவரிசை...
நாகர்கோவில் அருகே தலைமை ஆசிரியரிடம் ஐந்து சவரன் செயின் பறிக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கன்னியாகுமரி மாவட்டத்தை சேர்ந்த ஜெராபின் பிளவர் குயின் என்பவர் நாகர்கோவில் வடிவீஸ்வரம் அரசு தொடக்கப் பள்ளியில் தலைமை ஆசிரியராக உள்ளார். இந்நிலையில் பள்ளி முடிந்து மாலை வீட்டிற்கு செல்வதற்காக அவர் பேருந்து நிலையத்திற்கு நடந்து சென்றதாக சொல்லப்படுகிறது. அப்போது பின்னால் இருசக்கர வாகனத்தில் ஹெல்மெட் அணிந்து வந்த இளைஞர் ஒருவர் தலைமையாசிரியையின் கழுத்தில் அணிந்திருந்த ஐந்தரை சவரன் தங்கையை நகையை பறித்து விட்டு தப்பி ஓடியுள்ளார்.
இந்த செயின் பறிப்பு குறித்து கோட்டார் காவல் நிலையத்தில் தலைமை ஆசிரியை புகார் அளித்த நிலையில், அதன் அடிப்படையில் போலீசார் வழக்கு பதிவு செய்து, தனிப்படைகள் அமைத்து விசாரணை மேற்கொண்டதில் சிசிடிவி காட்சிகள் சிக்கியது. அந்த காட்சிகளின் அடிப்படையில் இரணியல் அருகே உள்ள மாங்கோடு பகுதியை சேர்ந்த சிவா என்பவரிடம் விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில் செயின் பறித்த குற்றத்தை அந்நபர் ஒப்புக்கொண்ட நிலையில், பல திடுக்கிடும் உண்மைகளும் வெளியாகின. அதில் குடும்ப செலவுக்கு பணம் இல்லாததால் தந்தை சிவசங்கருடன் சேர்ந்து திருட்டில் ஈடுபட்டதாக சிவா வாக்குமூலம் அளித்தார். மேலும் பலரது வீட்டில் திருடிய LED டிவி , ஹோம் தியேட்டர், வெண்கல குத்துவிளக்கு, வெண்கலப் பானை, கேஸ் சிலிண்டர், இரு சக்கர வாகனம் ஆகியவற்றையும் வடசேரி பகுதியில் சோனி டிவி ,குங்குமச்சிமிழ் உள்ளிட்ட பொருட்கள் குற்றவாளியிடம் இடமிருந்து கைப்பற்றப்பட்டது.
What's Your Reaction?