நிரம்பி வழியும் அண்ணா அறிவாலயம்... விருப்ப மனு சமர்பிக்க இன்றே கடைசிநாள்...

2024 நாடாளுமன்றத் தேர்தலில் திமுக சார்பாக போட்டியிட விரும்புபவர்கள் திமுக தலைமையகத்தில் விருப்ப மனுக்களை சமர்ப்பிக்க இன்றே கடைசி நாள் என்பதால் அறிவாலயம் திமுக தொண்டர்கள் தலைவர்களால் நிரம்பி வழிகிறது.

Mar 7, 2024 - 15:33

வரும் தேர்தலில் திமுக சார்பாக போட்டியிட விரும்புவோர் விருப்ப மனுக்களை கடந்த மார்ச் 1-ம் தேதி முதல் சமர்ப்பித்து வருகின்றனர். இன்று (மார்ச் 7) கடைசி நாள் என்பதால்  போட்டியிட விரும்புவோர், அவர்களது ஆதரவாளர்கள் என அண்ணா அறிவாலயமே நிரம்பி வழிகிறது.

இதுவரை, விருப்ப மனு கொடுத்தோரின் விவரங்கள்,

01.ஆ.ராசா (நீலகிரி மக்களவை உறுப்பினர்)
02.டி.ஆர்.பாலு (ஸ்ரீபெரும்புதூர் மக்களவை உறுப்பினர்)
03.கனிமொழி (தூத்துக்குடி மக்களவை உறுப்பினர்)
04.அருண் நேரு (அமைச்சர் கே.என்.நேரு மகன்)
05.கதிர் ஆனந்த் (அமைச்சர் துரைமுருகன் மகன்)
06.பழனியப்பன் (தர்மபுரி மாவட்டச் செயலாளர்)
07.அலெக்ஸ் அப்பாவு (பேரவைத் தலைவர் அப்பாவு மகன்)
08.வினோத் காந்தி (அமைச்சர் காந்தியின் மகன்)
09.பூரண சங்கீதா சின்னமுத்து (சிவகங்கை)
10.சிவகுரு (தென்காசி)
11.கலாநிதி வீராசாமி (மக்களவை உறுப்பினர், சென்னை வடக்கு)
12.தமிழச்சி தங்கபாண்டியன் (மக்களவை உறுப்பினர், சென்னை தெற்கு)

மேலும் சில முக்கியத் தலைவர்கள் இன்று விருப்ப மனு தாக்கல் செய்வார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. திமுகவின் முக்கிய உறுப்பினர்கள் அல்லாமல் பலரும் விருப்ப மனு சமர்ப்பித்து வரும் நிலையில், திமுக எம்பி கனிமொழி பெயரில் மட்டும் நிறைய விருப்ப மனுக்கள் வந்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow