நெருங்கும் தேர்தல்… பிரதமர் மோடி சூறாவளி சுற்றுப்பயணம்!
மக்களவைத் தேர்தல் நெருங்கியுள்ள நிலையில், பிரதமர் மோடி அசாம், அருணாச்சல பிரதேசம், மேற்கு வங்கம் மற்றும் உத்தரப் பிரதேச மாநிலங்களுக்கு சூறாவளி சுற்றுப்பயணம் மேற்கொள்கிறார்.
மக்களவைத் தேர்தல் தேதி சில தினங்களில் அறிவிக்கப்படவுள்ள நிலையில், அதற்கு முன்னதாக பல மாநிலங்களுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு அரசுத் திட்டங்களைப் பிரதமர் மோடி துவக்கி வைத்து வருகிறார். அதன் ஒரு பகுதியாக அசாம், அருணாச்சல பிரதேசம், மேற்கு வங்கம் மற்றும் உத்தரப் பிரதேச மாநிலங்களுக்கு இரண்டு நாள் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார்.
நேற்று இரவு அசாம் சென்றடைந்த அவர், இன்று காலை காசிரங்கா தேசிய உயிரியல் பூங்காவை சுற்றிப்பார்த்து, யானை சாவாரி மேற்கொண்டார். இதையடுத்து, காலை 10.30 மணிக்கு இடாநகரில் நடைபெறும் விக்சித் பார்த் கூட்டத்தில் கலந்துகொள்கிறார். அப்போது, 13 அடி உயரத்தில், 3 ஆயிரம் நீளம் கொண்ட சீலா சுரங்கப் பாதையை நாட்டிற்கு அர்ப்பணிக்கிறார். இதையடுத்து, ரூ.83 ஆயிரம் கோடி மதிப்பிலான பல்வேறு நலத்திட்டப்பணிகளைத் துவங்கி வைக்கிறார்.
இதையடுத்து, மாலை 3.45 மணியளவில் மேற்கு வங்கம் செல்லும் அவர் பொதுக்கூட்டம் ஒன்றில் கலந்துகொள்கிறார். அங்கும் 4,500 கோடி மதிப்பிலான வளர்ச்சி திட்டங்களைத் தொடங்கி வைத்த பின், மாலை 7 மணிக்கு வாரணாசி செல்கிறார். அங்கு காசி விஸ்வநாதர் ஆலயத்தில் வழிபாடு செய்கிறார்.
What's Your Reaction?