Lose belly fat: தொப்பை கொழுப்பை குறைக்க வேண்டுமா? இந்த 10 பழங்களை ட்ரை பண்ணுங்க!

இன்ஸ்டாவில் பிரபலமான பிட்னஸ் பயிற்சியாளர் டில்லன் ஸ்வின்னி, தன்னுடைய தொப்பை கொழுப்பை குறைக்க உதவிய 10 பழங்களின் பட்டியலை பகிர்ந்துள்ளார்.

Apr 16, 2025 - 08:03
Lose belly fat: தொப்பை கொழுப்பை குறைக்க வேண்டுமா? இந்த 10 பழங்களை ட்ரை பண்ணுங்க!
10 fruits that can help you lose belly fat says fitness coach dillon swinney

என்ன தான் உடற்பயிற்சி செய்தாலும், தொப்பை கொழுப்பை குறைக்க முடியாமல் சிரமப்படுபவரா நீங்கள்? உணவில் கட்டுப்பாடுகள் இல்லாமல் நாம் எவ்வளவு உடற்பயிற்சி செய்தாலும் பயனில்லை. இந்நிலையில் இன்ஸ்டாகிராமில் பிரபலமான பிட்னஸ் பயிற்சியாளர் டில்லன் ஸ்வின்னி வீடியோ ஒன்றினை வெளியிட்டுள்ளார். அதில், தனது தொப்பை கொழுப்பை குறைக்க உதவிய 10 பழங்கள் என ஒரு பட்டியலை வெளியிட்டுள்ளார். அவற்றி விவரம் இதோ..

பெர்ரி (ஸ்ட்ராபெர்ரி, புளுபெர்ரி, ராஸ்பெர்ரி) - ஆக்ஸிஜனேற்றிகள் மற்றும் நார்ச்சத்து நிறைந்தவை, அவை வளர்சிதை மாற்றத்தை அதிகரிக்கவும் தொப்பை கொழுப்பைக் குறைக்கவும் உதவுகின்றன.

ஆப்பிள்கள் - நார்ச்சத்து அதிகம் உள்ள ஆப்பிள்களை சாப்பிட்டால் நமது வயிறு நிரம்பியது போல் ஒரு உணர்வை தரும். இதனால் அதிகமாக சாப்பிடாமல் இருப்போம். கொழுப்பு இழப்பிற்கும் மறைமுகமாக உதவுகின்றன.

திராட்சைப்பழம் - கொழுப்பை குறைக்கும் பண்புகளுக்கு பெயர் பெற்ற திராட்சைப்பழம் இன்சுலின் அளவைக் குறைத்து கொழுப்பு இழப்பை ஊக்குவிக்கிறது.

வெண்ணெய் பழங்கள் (அவகேடா) - ஆரோக்கியமான கொழுப்புகள் நிறைந்த வெண்ணெய் பழங்கள், ஆப்பிள்களை போல் சாப்பிட்டதும் நமது வயிறு நிரம்பியது போல் ஒரு உணர்வை தரும். மேலும் இவை கொழுப்பு வளர்சிதை மாற்றத்தை ஆதரிக்கின்றன.

அன்னாசிப்பழம் - செரிமானத்திற்கு உதவும் மற்றும் வயிற்றுப் புழுக்கத்தைக் குறைக்கும் நொதியான ப்ரோமெலைன் (bromelain) அன்னாச்சிப்பழத்தில் அதிகமுள்ளது.

கிவி - வைட்டமின் சி மற்றும் நார்ச்சத்து அதிகம் உள்ள கிவி, தொப்பை கொழுப்பைக் குறைத்து செரிமானத்தை மேம்படுத்த உதவுகிறது.

தர்பூசணி - அதிக நீர் சத்து நிறைந்துள்ள தர்பூசணி பழத்தினை சாப்பிட்டால் பல மணி நேரம் நமது உடல் நீரேற்றத்துடன் இருப்பது போல் வைத்திருக்கும். இது பசியைக் கட்டுப்படுத்த உதவுகிறது.

பீச் - நார்ச்சத்து நிறைந்தது. குறைந்த கலோரிகள் கொண்ட பீச் பழமானது கொழுப்பைக் குறைக்க பெரிதும் உதவுகிறது.

பப்பாளி - செரிமானத்திற்கு உதவும் மற்றும் வயிற்றுப் புழுக்கத்தைக் குறைக்கும் நொதிகளைக் கொண்டுள்ளது.

ஆரஞ்சு - வைட்டமின் சி நிறைந்த ஆரஞ்சு, வளர்சிதை மாற்றத்தை அதிகரிக்கும் மற்றும் கொழுப்பை குறைக்க உதவும்.

”மேற்குறிப்பிட்ட பழங்கள் எனது ஊட்டச்சத்து மற்றும் கொழுப்பு குறைப்பு நடவடிக்கைக்களில் எனக்கு பெரிதும் உதவியது. உங்களின் தொப்பை கொழுப்பு குறைக்கும் முயற்சிக்கு இது உதவும் என நம்புகிறேன்” என டில்லன் ஸ்வின்னி தெரிவித்துள்ளார்.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow