Chettinad Aadi Kummayam: செட்டிநாடு பேவரைட் ஸ்வீட்.. கும்மாயம் செய்வது எப்படி?
செட்டிநாடு பகுதிகளில் பலரால் விரும்பப்படும் இனிப்பு பலகாரங்களில் ஒன்றான கும்மாயம் எப்படி செய்வது என்பதனை இங்கு காணலாம்.

நாவில் நாட்டியமாடும் செட்டிநாடு உணவுகள் என்கிற தலைப்பில், செட்டிநாடு உணவு வகைகள் தயாரிப்பு குறித்த தொடர் நமது குமுதம் குழுமத்தின் சிநேகிதி இதழில் தொடர்ந்து வெளியாகி வருகிறது.
முத்து சபாரெத்தினம் அவர்கள் செட்டிநாடு உணவு வகை தயாரிப்பு குறித்த ஆலோசனைகளை வழங்கி வரும் நிலையில் இந்த கட்டுரையில் செட்டிநாடு பலகாரங்களில் புகழ்பெற்ற கும்மாயம் செய்வது எப்படி? என்பதனை காணலாம்.
கும்மாயம்: காரைக்குடி, செட்டிநாடு பகுதிகளில் ஆடி மாதத்தில் பெருமாளுக்கு படைக்கும் ஒரு வகையான இனிப்பு பலகாரமாகும்.
தேவையான பொருட்கள்: கும்மாய மாவு - 200 கிராம், கருப்பட்டி மற்றும் வெல்லம் - 1 1/2 கப், நெய் - 100 கிராம், நல்லெண்ணெய் 50 கிராம், தண்ணீர் 4 கப். சிலருக்கு கும்மாய மாவு அப்படினா என்ன? என சந்தேகம் எழலாம். அது வேறொன்றுமில்லை, பச்சரிசி, பாசிப்பருப்பு, உளுந்து ஆகியவற்றை தலா 1 கப் எடுத்து வெறும் வாணலியில் வெதுப்பி, பொடித்து, சலித்தால் 'கும்மாய மாவு' தயார்.
செய்முறை: பானில், தலா 50 கிராம் நெய், நல்லெண்ணெய் ஊற்றி, கும்மாய மாவைச் சேர்த்து, வாசனை வரும்வரை வறுக்கவும் இன்னொரு பாத்திரத்தில் 4 கப் தண்ணீர் ஊற்றி, வெல்லம், கருப்பட்டியை உடைத்துப் போட்டு, அடுப்பில் வைக்கவும். கரைந்ததும், வடிகட்டி, மாவில் சேர்த்து, கட்டிகளில்லாமல் கரைக்கவும். பின்னர், அடுப்பில் வைத்து, கைவிடாமல் கிளறவும். கையில் ஒட்டாமல் கெட்டியாக கண்ணாடிபோல வரும்வரை கிளறி, மீதமுள்ள நெய்யை ஊற்றி, இறக்கினால் சுவையான கும்மாயம் ரெடி.
Read more: Mutton stew: கேரளா ஸ்டைலில் சுவையான ‘மட்டன் ஸ்டூ’ - ஈஸியா செய்ய சூப்பர் வழி!
What's Your Reaction?






