அதிகரிக்கும் காய்ச்சல் எண்ணிக்கை.. மருத்துவர்கள் சொல்லும் அறிவுரை
மதுரையில் காய்ச்சலால் பாதிக்கப்பட்டவர் எண்ணிக்கை அதிகரிப்பு. இருவருக்கு டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டதால் அரசு ராஜாஜி மருத்துவமனையில் சிகிச்சை. பருவநிலை மாற்றம் காரணமாக ஒரே நாளில் 107 பேர் காய்ச்சலால் அனுமதி
மதுரையில் காய்ச்சலால் பாதிக்கப்பட்டவர் எண்ணிக்கை அதிகரிப்பு. இருவருக்கு டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டதால் அரசு ராஜாஜி மருத்துவமனையில் சிகிச்சை. பருவநிலை மாற்றம் காரணமாக ஒரே நாளில் 107 பேர் காய்ச்சலால் அனுமதி
தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் மழையும், கடும் வெயிலும் அவ்வப்போது மாறி மாறி இருந்து வருகிறது. இதனால், ஒரு சில மாவட்டங்களில் டெங்கு காய்ச்சல் பாதிப்பு அதிகரித்து வருகிறது.
இந்த நிலையில், இம்மாதத்தில் பருவ மழை தொடங்குவதையொட்டி முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக தமிழ்நாடு சுகாதாரத்துறை சார்பில் அரசு மருத்துவமனைகளில் டெங்கு காய்ச்சல் பாதிப்பு ஏற்பட்டுள்ள நோயாளிகளுக்கு துரிதமாக சிகிச்சை அளிக்க ஏற்பாடு செய்யப்பட்டது.
மேலும், டெங்கு காய்ச்சலுக்கு சிகிச்சை அளிக்க சிறப்பு வார்டுகள் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளது. கடந்த மாதம் மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில் டெங்கு காய்ச்சல் பாதிக்கப்பட்ட நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்க 20 படுக்கைகளுடன் கூடிய சிறப்பு வார்டு தயார் செய்யப்பட்டது.
அதனை தொடர்ந்து, மதுரை மாவட்டத்தை சேர்ந்த 3 பேர் மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில் வைரஸ் காய்ச்சல் பாதிப்புடன் அனுமதிக்கப்பட்டனர். அவர்களுக்கு நடத்தப்பட்ட பரிசோதனையில், டெங்கு காய்ச்சல் இருப்பது உறுதியானது. இதனை தொடர்ந்து அவர்கள் 3 பேருக்கும் மருத்துவமனையில் உள்ள டெங்கு சிறப்பு வார்டில் அனுமதிக்கப்பட்டனர்.
அங்கு அவர்களுக்கு 24 மணிநேர மருத்துவர்கள் கண்காணிப்பில் இருந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்ட 3 பேரில் ஒருவர் பூரண குணமடைந்து இன்று வீடு திரும்புகிறார்.
இது குறித்து மருத்துவமனை பொறுப்பு முதல்வர் செல்வராணி கூறுகையில், "தற்போது பாதிக்கப்பட்ட 2 பேரின் உடல் நிலையும் சீராக உள்ளது. அவர்களை தொடர்ந்து கண்காணித்து வருகிறோம். பாதிக்கப்பட்ட நபர்களின் இருப்பிடங்களுக்கு சென்று டெங்கு ஒழிப்பு பணிகள் தீவிர படுத்தப்பட்டுள்ளது. இதுபோல் வேறு யாருக்கும் டெங்கு பாதிப்பு இருக்கிறதா.? என்பது குறித்து பரிசோதனையும் நடைபெறுகிறது.
பருவநிலை மாற்றத்தால் நேற்று ஒரே நாளில் மட்டும் 107 பேர் காய்ச்சல் பாதிப்புடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றுனர்.
அதில், 48 பேர் வெளிநோயாளிகளாக சிகிச்சை பெற்று வீட்டிற்கு சென்றுள்ளனர். மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட 59 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். ஒரே நாளில் 107 காய்ச்சலால் பாதிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
மேலும், பருவ மழை பெய்யும் காலங்களில் இதுபோன்ற காய்ச்சல் பாதிப்புகள் அதிகமாகும் என தெரிவித்துள்ளதால் பொதுமக்கள் எச்சரிக்கையுடன் இருக்க அறிவுறுத்த பட்டுள்ளது.
நீர்நிலைப் பகுதிகளில் இருக்கக்கூடிய பொதுமக்கள் தங்களது வீடுகளில் கொசுவலை கட்டாயம் இருக்க வேண்டும், இரவு நேரங்களில் கொசுக்கள் கடிப்பதை விட பகல் நேரங்களில் கடிக்கும் கொசுக்களாலே டெங்கு காய்ச்சல் பரவுகிறது. தங்களது வீடுகளை சுத்தமாக வைத்துக் கொள்ள வேண்டும், நண்ணீர் தேங்க விடாமல் பார்த்துக் கொள்ள வேண்டும்” என மருத்துவர்கள் அறிவுறுத்தி வருகின்றனர்.
What's Your Reaction?