200 கிலோ கஞ்சாவை கடத்த முயற்சி… அலேக்காக தூக்கிய போலீசார்!

ஆந்திராவிலிருந்து சென்னைக்கு கடத்தி வந்த ரூ.20 லட்சம் மதிப்பிலான 200 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. 

Oct 19, 2024 - 14:55
200 கிலோ கஞ்சாவை கடத்த முயற்சி… அலேக்காக தூக்கிய போலீசார்!

தமிழகத்தில் போதைப்பொருள் பரவலைக் கட்டுப்படுத்த EBCID, தமிழ்நாடு அனைத்து முயற்சிகளையும் எடுத்து வருகிறது. முக்கிய சோதனை நடத்தப்பட்டதில் 17 அக்டோபர் 2024 அன்று மத்திய நுண்ணறிவு பிரிவு சென்னை ரேஞ்ச் இன்ஸ்பெக்டர் அன்பரசி மற்றும் அவரது குழுவினர் மாநிலங்களுக்கு இடையேயான 4 கஞ்சா கடத்தல்காரர்களை பிடித்தனர். சுமார் ரூ.20,00,000/- மதிப்புள்ள 200 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்தனர். மினி லோட் கேரியரான Force Trax பதிவு எண் AP 39 UH 5461 மற்றும் பதிவு எண் AP 21 UH 5461 கொண்ட கார் Honda Amaze ஆகியவற்றை குற்றவாளிகளிடமிருந்து கைப்பற்றினர்.

ஆந்திராவை சேர்ந்த சகோதரர்கள் ராஜு (அ) மோகன்ராஜ், சண்முகநாதன் (அ) பிரபு, பாலமுருகன் ஆகியோர்கள் ஆந்திராவில் இருந்து கஞ்சாவை கொண்டு வந்து தமிழகத்தில் விற்பனை செய்தனர். கஞ்சா ஏற்றிச் சென்ற சுமை வாகனத்திற்கு எஸ்கார்ட் சென்ற ஹோண்டா அமேஸ் காரை செந்தில்நாதன் என்பவர் ஓட்டினார். குற்றம் சாட்டப்பட்ட 4 பேரும் கைது செய்யப்பட்டு வழக்கு விசாரணை நடந்து வருகிறது.

தகவலறிந்து வந்த சென்னை மத்திய நுண்ணறிவு பிரிவு போலீஸார் திருவள்ளூர் எளாவூர் சோதனைச் சாவடி அருகே வாழைப்பழம் ஏற்றிச் சென்ற வாகனத்தை மடக்கிப் பிடித்தனர். போலீசார் வாகனத்தை சோதனை செய்ததில் 100 கிலோ எடையுள்ள 10 கஞ்சா பார்சல்கள் கண்டறியப்பட்டது. வாகனத்தில் ஒரு ரகசிய அறை இருப்பதைக் கண்டறிந்த குழுவினர் மேலும் 100 கிலோ எடையுள்ள 10 பார்சல்களையும் கைப்பற்றினர்.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow