வெள்ளத்தை திசை திருப்பவே ஆளுநர் விவகாரமா? … விளக்கம் அளித்த் அமைச்சர்!
சென்னை வெள்ளத்தை திசை திருப்பவே ஆளுநர் விவகாரம் கையில் எடுக்கப்பட்டுள்ளதாக மத்திய இணை அமைச்சர் எல்.முருகனின் குற்றச்சாட்டுக்கு அமைச்சர் முத்துசாமி பதிலளித்துள்ளார்.
ஈரோடு திண்டலில் உள்ள தனியார் கல்லூரியில் நடைபெற்று வரும் தனியார் வேலைவாய்ப்பு முகாமில் பங்கேற்று தேர்வானார்களுக்கு பணி நியமன ஆணைகளை தமிழக வீட்டுவசதி துறை அமைச்சர் முத்துசாமி வழங்கினார்.
பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர், ”ஆளுநர் நிகழ்ச்சியில் திராவிட நாடு என்ற வார்த்தை தவற விட்டதை சர்ச்சை என சொல்ல முடியாது. அது கடுமையான விமர்சனம் மற்றும் மிகப்பெரிய தவறு. நாட்டுப்பண் பாடலில் இதுபோன்று வரிளை விடமுடியுமா? இதெல்லாம் மிகுந்த வேதனை அளிப்பதுடன் அமைதியான சூழ்நிலையை கெடுக்கின்ற விதமாக உள்ளது” என்று அமைச்சர் முத்துசாமி தெரிவித்தார்.
தொடர்ந்து பேசிய அமைச்சர் முத்துச்சாமி, வேறு மாநிலத்தில் இருந்து வருபவர்களுடன் இங்குள்ள தமிழர்கள் மிகுந்த அக்கறையுடன் உறவு கொண்டிருக்கும் நிலையில், மிகப்பெரிய பதவியில் இருப்பவர்கள் ஒரு தவறான சூழ்நிலையை உருவாக்க காரணமாக இருக்க கூடாது என்றார்.
மேலும், சென்னை வெள்ளத்தை திசை திருப்பவே ஆளுநர் விவகாரம் கையில் எடுக்கப்பட்டுள்ளதாக மத்திய அமைச்சர் எல் முருகன் கூறியுள்ள குற்றச்சாட்டுக்கு பதிலளித்த அமைச்சர் முத்துசாமி, ”சென்னை வெள்ளத்தை முதல்வர் சரியான திசையில் திருப்பி விட்டதன் காரணமாக மக்கள் பாதிக்கவில்லை. சென்னை வெள்ளத்தில் அமைச்சர்கள் சிறப்பாக வேலை செய்து விட்டார்கள் என்பதை மறக்கடிக்க வேண்டும் என்பதற்காக தான் ஆளுநர் இதனை செய்துள்ளார்” என்று அமைச்சர் கூறினார்.
What's Your Reaction?