2047 என்ற இலக்கை நோக்கி இந்தியாவை வேகமாக வழிநடத்தி வருகிறேன்... பிரதமர் மோடி பெருமிதம்!

2047 இந்தியாவை வளர்ந்த நாடாக்குவேன் என்ற தனது வாக்குறுதியை நோக்கி நாட்டை வேகமாக வழிநடத்தி வருவதாகப் பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.

Mar 10, 2024 - 14:29
2047 என்ற இலக்கை நோக்கி இந்தியாவை வேகமாக வழிநடத்தி வருகிறேன்... பிரதமர் மோடி பெருமிதம்!

பல்வேறு வளர்ச்சிப் பணிகள் மற்றும் பொதுக்கூட்டங்களில் கலந்துகொள்ளப் பிரதமர் மோடி நேற்று உத்தரப் பிரதேச மாநிலம் வாரணாசிக்குச் சென்றார். அங்கு காசிவிஸ்வநாதர் ஆலயத்தில் வழிபாடு செய்தார். இதையடுத்து,  ஆசம்கர் நகரில் நடைபெற்ற பிரம்மாண்ட கூட்டத்தில் கலந்துகொண்டார். அப்போது, அவர், பூனே, கோலாப்பூர் உட்பட நாட்டின் பல்வேறு நகரங்களில் உள்ள விமான நிலையங்களில் கட்டப்பட்டுள்ள புதிய முனையங்களைத் திறந்து வைத்தார். மேலும், கடப்பா, ஹூபிலி மற்றும் பெலகாவி விமான நிலையங்களில் கட்டப்பட உள்ள புதிய முனையங்களுக்கு அடிக்கல் நாட்டினர். மொத்தம் ரூ.34,000 கோடி மதிப்பிலான திட்டங்களையும் தொடங்கி வைத்தார்.

இதையடுத்து, அந்த நிகழ்ச்சியில் பேசிய அவர், ”ஆசம்கர் நகரம் இன்று நட்சத்திரம் போல் ஜொலிப்பதாக கூறினார்.  வழக்கமாக டெல்லியில் நடைபெறும் கூட்டங்களில் பல்வேறு பகுதிகளில் இருந்து மக்கள் திரளாகச் சென்று கலந்துகொள்வார்கள். ஆனால், இன்று ஆசம்கருக்கு நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்து மக்கள் திரண்டு வந்துள்ளனர்” என்றார். மேலும், ”2047ம் ஆண்டு இந்தியாவை வளர்ந்த நாடாக மாற்றுவேன் எனத் தான் அளிக்க வாக்குறுதியை நிறைவேற்றும் நோக்குடன் தேசத்தை வேகமாக வழிநடத்தி வருவதாகவும்” அவர் கூறினார்.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow