தமிழர் பண்பாட்டை பறைசாற்றும் ‘தமிழ் தெம்பு’ திருவிழா... ஈஷாவில் மகா சிவராத்திரியையொட்டி சிறப்பு ..! 

மார்ச் 9 - மார்ச் 17 வரை ஈஷாவின் ஆதியோகி சிலை முன்பு ‘தமிழ் தெம்பு’ திருவிழா

Mar 10, 2024 - 12:29
தமிழர் பண்பாட்டை பறைசாற்றும் ‘தமிழ் தெம்பு’ திருவிழா... ஈஷாவில் மகா சிவராத்திரியையொட்டி சிறப்பு ..! 

மகா சிவராத்திரி விழாவை தொடர்ந்து 9 நாட்கள் கோவை தொண்டாமுதூர் பகுதியில் உள்ள ஈஷாவின் ஆதியோகி சிலை முன்பு ‘தமிழ் தெம்பு’எனும் பெயரில் தமிழ் கலாச்சாரத்தின் பல்வேறு அம்சங்களை கொண்டாடும் திருவிழா நடைபெற இருக்கிறது. இதில் சிறப்பம்சமாக ஆன்மீகம், அறிவியல், மருத்துவம், விளையாட்டு உள்ளிட்டவற்றை உள்ளடக்கிய தமிழர் வாழ்வியல் கண்காட்சி, நாட்டுப்புற கலை நிகழ்ச்சிகள், ரேக்ளா பந்தயம், நாட்டு மாடுகள் கண்காட்சி மற்றும் சந்தை, பாரம்பரிய உணவு திருவிழா உள்ளிட்ட பல்வேறு அம்சங்கள் இடம்பெற உள்ளன. மேலும், குதிரை சவாரி, ஒட்டக சவாரி, ராட்டினம் உள்ளிட்ட பொழுதுபோக்கு அம்சங்களும் இடம்பெற உள்ளது. இதனுடன் நாட்டுப்புற கலைஞர்களின் பறையாட்டம், சிலம்பாட்டம், ஒயிலாட்டம், சலங்கையாட்டம், போன்ற நடன நிகழ்ச்சிகளும் நடக்கவுள்ளது. 

இந்த நிகழ்ச்சிகள் மார்ச் 9ம் தேதி தொடங்கிய நிலையில், மார்ச் 17-ம் தேதி வரை தினமும் காலை 10 மணி முதல் இரவு 9 மணி வரை நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. முதல் நாளில் திருப்பூரை சேர்ந்த கலைக் குழுவின் சலங்கையாட்டம் நடைபெற்றது. இதுதவிர விழாவில், கைலாய வாத்தியம், ஆதியோகி திவ்ய தரிசனம் ஆகிய நிகழ்ச்சிகளும் இடம்பெற்றிருந்தன. மேலும், 2-ம் நாளான இன்று மதுரையைச் சேர்ந்த கலைக்குழுவின் பறை இசை நிகழ்ச்சியும் நடைபெற உள்ளது. அத்துடன் வரும் மார்ச் 15 ஆம் தேதி முதல் 17 ஆம் தேதி வரை நாட்டு மாட்டு சந்தையும், மார்ச் 17 அன்று ரேக்ளா பந்தையமும் நடைபெற இருக்கிறது.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow