அரசியல் உள்நோக்கத்துடன் பாலியல் குற்றச்சாட்டு - எடியூரப்பா விளக்கம்
பாலியல் குற்றச்சாட்டு பின்னணியில் அரசியல் உள்நோக்கம் உள்ளது
தன் மீதான பாலியல் குற்றச்சாட்டு பின்னணியில் அரசியல் உள்நோக்கம் இருப்பதாக கர்நாடகா முன்னாள் முதலமைச்சர் எடியூரப்பா தெரிவித்துள்ளார்.
பெங்களூரை சேர்ந்த 17 வயது சிறுமியின் தாயார் அளித்த புகாரின் பேரில், கர்நாடக முன்னாள் முதலமைச்சர் எடியூரப்பா மீது சதாசிவம் நகர் காவல் நிலையத்தில் பாலியல் துன்புறுத்தல் மற்றும் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
எடியூரப்பா மீதான இந்த புகார் கர்நாடக அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில், கர்நாடக முன்னாள் முதலமைச்சர் எடியூரப்பா இது குறித்து விளக்கம் அளித்துள்ளார். "சில நாட்களுக்கு முன்பு ஒரு பெண் ஏதோ பிரச்சனை என்று அழுது கொண்டு என் வீட்டிற்கு வந்தார். பிரச்னையைகேட்டு நான் தனிப்பட்ட முறையில் போலீசுக்கு போன் செய்து விவரத்தை தெரிவித்தேன். இந்த விவகாரம் குறித்து போலீஸ் கமிஷனர், அவருக்கு உதவுமாறு கூறினார். பின்னர், அந்த பெண் எனக்கு எதிராக பேச ஆரம்பித்தார். இதை போலீஸ் கமிஷனர் கவனத்திற்கு கொண்டு சென்றுள்ளேன். நேற்று போலீசார் என் மீது வழக்குப்பதிவு செய்துள்ளனர். அடுத்து என்ன நடக்கிறது என்று பார்ப்போம், இதன் பின்னணியில் அரசியல் உள்நோக்கம் இருக்கிறது." என அவர் தெரிவித்துள்ளார்.
What's Your Reaction?