இந்தியா - ஐரோப்பிய ஒன்றியத்தின் இடையே தடையில்லா வர்த்தக ஒப்பந்தம் கையெழுத்து...
இந்தியா - ஐரோப்பிய ஒன்றியத்தினிடையே ஆன தடையில்லா வர்த்தக ஒப்பந்தம் அனைத்து நாடுகளுக்கும் கிடைத்த வெற்றி எனப் பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.
இந்திய வர்த்தக மற்றும் பொருளாதார பங்கேற்பு ஒப்பந்தக் குழு, ஐரோப்பிய தடையில்லா வர்த்தக கூட்டமைப்புடன் இணைந்து ஒப்பந்தம் செய்துள்ளது. இதன் மூலம் சுவிட்சர்லாந்து, நார்வே, ஐஸ்லாந்து மற்றும் லிச்சென்ஸ்டீன் ஆகிய நாடுகளுடன் தடையில்லா வர்த்தகம் மேற்கொள்ள முடியும். மத்திய வர்த்தகத்துறை அமைச்சர் பியூஸ் கோயல் தலைமையிலான குழு இன்று டெல்லியில் - ஐரோப்பிய குழுவினருடன் பேச்சு வார்த்தை நடத்தி ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டது.
இந்திய குழுவினரைப் பாராட்டி பிரதமர் மோடி கடிதம் எழுதியுள்ளார். அதில், ”இந்த ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ள இந்தியா மற்றும் ஐரோப்பிய குழுவினருக்குத் தனது பாராட்டுக்களைத் தெரிவித்துக்கொள்வதாகக் கூறியுள்ளார். மேலும், இந்த ஒப்பந்தம் மிகப்பெரிய மைல்கள் என்றும் அவர் பாராட்டியுள்ளார். இருதரப்பினருக்கும் ஏற்ற வகையில் இந்த ஒப்பந்தம் கையெழுத்தாகியுள்ளது, வளர்ச்சியை நோக்கிய நமது ஆர்வத்தை இது விளக்குவதாக உள்ளது. மேலும், இது அனைத்து நாடுகளுக்கும் கிடைத்த வெற்றி” என தெரிவித்துள்ளார்.
What's Your Reaction?