தேர்தல் நாளில் பொது விடுமுறை.. "சம்பளமும் கொடுக்கணும் லீவும் கொடுக்கணும்.." தேர்தல் ஆணையம் உத்தரவு..!
சட்டப்பிரிவு 135B-ன் கீழ் ஜனநாயக கடைமையாற்றும் ஊழியர்களுக்கு ஊதியத்துடன் கூடிய சம்பளம் அளிக்க வேண்டும்.
மக்களவைத் தேர்தல் நடைபெறும் நாட்களில் ஊதியத்துடன் கூடிய பொது விடுமுறை அளிக்க வேண்டும் என இந்திய தேர்தல் ஆணையம் அறிவுறுத்தியுள்ளது.
மக்களவைத் தேர்தல் ஏப்ரல் 19 ஆம் தேதி தொடங்கி ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டங்களாக நடைபெறுகிறது. இதனிடையே, தமிழகம், புதுச்சேரியில் ஒரே கட்டமாக ஏப்ரல் 19 ஆம் தேதி அன்று வாக்குப் பதிவு நடைபெறுகிறது. அத்துடன் அன்றைய தினமே தமிழகத்தில் காலியாக உள்ள விளவங்கோடு சட்டப்பேரவைத் தொகுதிக்கான இடைத்தேர்தலும் நடைபெறுகிறது.
இதன்படி ஒவ்வொரு கட்டத்தின் வாக்குப்பதிவு நாளான்று ஊதியத்துடன் கூடிய பொது விடுமுறை அளிக்க அனைத்து மாநில தலைமைச் செயலாளர்கள் மற்றும் தலைமை தேர்தல் அதிகாரிகள் உரிய அறிவுறுத்தல் வழங்க வேண்டும் என இந்திய தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.
இந்திய சட்டப்பிரிவு 135B-ன் கீழ் ஜனநாயக கடைமையாற்றும் ஊழியர்களுக்கு ஊதியத்துடன் கூடிய சம்பளம் அளிக்க வேண்டும். ஆனால் இதனை பல நிறுவனங்கள் மதிக்காமல், ஊழியர்களை வேலைக்கு அழைப்பது பல இடங்களில் நிகழ்ந்து வருகிறது. இதனிடையே சட்டத்தை உறுதிப்படுத்தி மக்கள் எந்த இடையூறும் இன்றி வாக்களிக்கும் வகையில் தேர்தல் ஆணையம் ஒவ்வொரு மாநிலத்திற்கும் உத்தரவிட்டிருக்கிறது. இதனை மீறுவோர் மீது கடுமையான சட்டநடவடிக்கை பாயும் எனவும் எச்சரித்துள்ளது.
What's Your Reaction?