கனடாவில் 24 வயது இந்திய மாணவர் காருக்குள் வைத்து சுட்டுக்கொலை... நடந்தது என்ன?

Apr 14, 2024 - 17:26
கனடாவில் 24 வயது இந்திய மாணவர் காருக்குள் வைத்து சுட்டுக்கொலை... நடந்தது என்ன?

கனடாவில் 24 வயதான இந்திய மாணவர் காருக்குள் துப்பாக்கியால் சுடப்பட்டு உயிரிழந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கனடாவின் வேன்க்கூவர் நகரின் தெற்குப் பகுதியில் கடந்த ஏப்ரல் 12 ஆம் தேதி இரவு 11 மணியளவில், துப்பாக்கி சுடும் சத்தம் கேட்டதாக அப்பகுதியில் வசிக்கும் மக்கள் காவல்துறைக்கு தகவல் கொடுத்தனர். அதனடிப்படையில், சம்பவ இடம் சென்ற காவல்துறையினர், அங்கு நின்றிருந்த காருக்குள் சிராக் அண்ட்டில் என்ற 24 வயது இந்திய மாணவர் சுட்டுக் கொலை செய்யப்பட்டு இறந்த நிலையில் கிடப்பதை அறிந்து உடலை மீட்டனர்.

ஹரியானாவைச் சேர்ந்த சிராக் அண்ட்டில் கொலைசெய்யப்பட்டதை அவரது குடும்பத்தினருக்கு தெரியப்படுத்துமாறு இந்திய வெளியுறவுத் துறைக்கு தகவல் கொடுக்கப்பட்டுள்ளது. சிராக் கொலை செய்யப்பட்டது குறித்துப் பேசிய அவரது சகோதரர் ரோமித் அண்ட்டில், ஏப்ரல் 12 ஆம் தேதி காலை தன்னிடம் பேசியதாகவும், அப்போது அவர் எப்போதும் போல் சாதாரணமாகப் பேசியதாகவும், தனது audi காரை எடுத்துக்கொண்டு எங்கோ வெளியே செல்ல புறப்பட்டதாகவும் தெரிவித்தார்.

சிராக்-ன் உடலை இந்தியாவிற்கு அனுப்ப கனடா அரசாங்கமும், இந்திய வெளியுறவுத் துறையும் உதவி செய்ய வேண்டும் என்று அவரது குடும்பத்தினர் கோரிக்கை வைத்துள்ளனர். சம்பவம் தொடர்பாக யாரும் கைது செய்யப்படாத நிலையில், கொலைக்கான காரணம் குறித்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

கடந்த 2022 ஆம் ஆண்டில் தான் சிராக் எம்பிஏ பட்டப்படிப்பை முடித்து, தற்போது அங்கே வேலை செய்வதற்காக கனடா அரசின் அனுமதியைப் பெற்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow