"அமெரிக்காவுடன் சேர்ந்து இஸ்ரேல் பதிலடி கொடுத்தால் விளைவு பயங்கரமாக இருக்கும்" எச்சரிக்கும் ஈரான்...
ட்ரோன், ஏவுகணை தாக்குதலுக்கு அமெரிக்காவுடன் சேர்ந்து இஸ்ரேல் பதில் தாக்குதல் நடத்தினால் கொடூர விளைவுகளை சந்திக்க நேரிடும் என ஈரான் எச்சரிச்கை விடுத்துள்ளது.
சிரியாவில் உள்ள ஈரான் தூதரகத்தை ஆளில்லா விமானம் மூலம் இஸ்ரேல் வெடிகுண்டுத் தாக்குதல் நடத்தியது. அந்தத் தாக்குதலில் ஈரானைச் சேர்ந்த முக்கியத் தளபதிகள் கொல்லப்பட்டனர். அந்தத் தாக்குதல் காரணமாக எப்போது வேண்டுமாலும் ஈரான், இஸ்ரேல் இடையே போர் ஆரம்பிக்கும் என்று உலக நாடுகள் பரபரப்பாக இருந்தன.
தொடர்ந்து இஸ்ரேல் மீது ஏவுகணைகள் மற்றும் ட்ரோன்கள் மூலம் ஈரான் தனது முதற்கட்ட தாக்குதலைத் தொடங்கியுள்ளது. இதுவரை மொத்தமாக 300 ட்ரோன்கள் மற்றும் ஏவுகணைகள் மூலம் இஸ்ரேல் மீது ஈரான் தாக்குதல் நடத்தியுள்ளது. அந்தத் தாக்குதலால் பெரிய அளவிலான சேதங்கள் எதுவும் இல்லை என இஸ்ரேல் கூறியுள்ளது.
ஈரான் நடத்திய தாக்குதலால், மத்திய கிழக்கு நாடுகளில் போர் பதற்றம் அதிகமாகியுள்ளது. இதுகுறித்துப் பேசிய அமெரிக்க அதிபர் ஜோ பைடன், “ஈரான் நடத்திய தாக்குதலை வன்மையாகக் கண்டிக்கிறேன். அமெரிக்காவின் உதவியுடன் ஈரானின் ஏவுகணைகள் மற்றும் ட்ரோன்களை இஸ்ரேல் வீழ்த்தியது. ஈரானின் தாக்குதல்களை கவனித்து வருகிறோம். மக்களை பாதுகாக்க அனைத்து நடவடிக்கைகளையும் எடுத்து வருகிறோம்” என்று பேசினார்.
இந்நிலையில் தாக்குதலுக்கு அமெரிக்காவுடன் சேர்ந்து இஸ்ரேல் பதிலடி கொடுக்க நினைத்தால், விளைவுகள் மிகக் கொடூரமாக இருக்கும் என ஈரான் எச்சரிக்கை விடுத்துள்ளது.
What's Your Reaction?