10 ஆண்டுகளில் நூல், துணி, ஆடை உற்பத்தி 25% உயர்வு - பிரதமர் பெருமிதம்
விவசாயிகள் பங்களிப்பால் பருத்தி, சணல், பட்டு உற்பத்தியில் உலகிலேயே இந்தியா முதலிடத்தில் உள்ளது.
கடந்த 10 ஆண்டுகளில் நூல், துணி, ஆடை உற்பத்தி 25% உயர்ந்துள்ளதாக பிரதமர் நரேந்திர மோடி பெருமிதம் தெரிவித்துள்ளார்.
மத்திய ஜவுளி வர்த்தக அமைச்சகம் சார்பில் டெல்லியில் உள்ள பாரத் மண்டப வர்த்தக மையத்தில் 'பாரத் டெக்ஸ் 2024' நிகழ்ச்சி இன்று முதல் மார்ச் 1-ம் தேதி வரை நடைபெறுகிறது.தொடர்ந்து இந்நிகழ்வை பிரதமர் நரேந்திர மோடி தொடங்கி வைத்தார். இதில் திருப்பூரைச் சேர்ந்த 50க்கும் மேற்பட்ட ஏற்றுமதி நிறுவனங்கள் உள்ளிட்ட நாடு முழுவதுமும் உள்ள ஜவுளித்துறையினர் தங்கள் உற்பத்திப் பொருட்களை காட்சிப்படுத்தியுள்ளனர்.
இந்நிலையில் நிகழ்ச்சியில் பேசிய பிரதமர் நரேந்திர மோடி, 2014ஆம் ஆண்டு ரூ.7 லட்சம் கோடியாக இருந்த இந்திய ஜவுளித்துறையின் மதிப்பீடு, தற்போது ரூ.12 லட்சம் கோடியைத் தாண்டியுள்ளதாகக் கூறினார்.
கோடிக்கணக்கான விவசாயிகள் பங்களிப்பால் பருத்தி, சணல், பட்டு உற்பத்தியில் உலகிலேயே இந்தியா முதலிடத்தில் உள்ளதாகவும், முதலீடு - வருவாய் அடிப்படையில் சிறுகுறு தொழில்நிறுவன வரையறைகளை திருத்தியுள்ளதாகவும் அவர் கூறினார்.
What's Your Reaction?