தரம் உயரும் 34 ரயில் நிலையங்கள்!! எந்ததெந்த கோட்டங்கள்?
ரூ.41,000 கோடி மதிப்புள்ள 2,000 ரயில்வே உள்கட்டமைப்பு திட்டங்களையும் பிரதமர் நரேந்திர மோடி திறந்து வைத்தார்.
தமிழ்நாட்டில் 34 ரயில் நிலையங்களை உலகத்தரத்தில் மேம்படுத்தும் பணிகளுக்கு பிரதமர் நரேந்திர மோடி அடிக்கல் நாட்டினார்.
அம்ருத் பாரத் ரயில் நிலையத்திட்டத்தின் கீழ் நாடு முழுவதும் உள்ள 1,318 ரயில் நிலையங்களை உலகத்தரத்துக்கு தரம் உயர்த்த திட்டமிடப்பட்டுள்ளது. அத்திட்டத்தின்படி இ
Prime Minister Modi
ரண்டாம் கட்டமாக, நாடு முழுவதும் 553 ரயில்நிலையங்கள், 19 ஆயிரம் கோடி ரூபாய் மதிப்பில் மேம்படுத்த திட்டமிடப்பட்டது. தொடர்ந்து காணொலி வாயிலாக இத்திட்டத்தை பிரதமர் நரேந்திர மோடி திறந்து வைத்தார்.
அதன்படி சென்னை கோட்டத்தில் 7, மதுரை கோட்டத்தில் 13, திருச்சி கோட்டத்தில் 4, சேலம் கோட்டத்தில் 8 என்பன உட்பட 34 ரயில்நிலைய மேம்பாட்டுப் பணிக்கு பிரதமர் நரேந்திர மோடி அடிக்கல் நாட்டினார்.
அதன்படி சென்னையில் கடற்கரை, கிண்டி, அம்பத்தூர், மாம்பலம், சூலூர்பேட்டை- சேலம் கோட்டத்தில் ஈரோடு, மேட்டுப்பாளையம், நாமக்கல், கோவை - திருச்சி கோட்டத்தில் திருவண்ணாமலை, விருதாச்சலம், கும்பகோணம் - மதுரை கோட்டத்தில் பழநி, திண்டுக்கல், பொள்ளாச்சி என்பன உட்பட 34 ரயில் நிலையங்கள் மேம்படுத்தப்படவுள்ளன. இந்நிகழ்ச்சியில் ரூ.41,000 கோடி மதிப்புள்ள 2,000 ரயில்வே உள்கட்டமைப்பு திட்டங்களையும் பிரதமர் நரேந்திர மோடி திறந்து வைத்தார்.
What's Your Reaction?