சென்னையில் ஒரே நாளில் 28 பேர் வேட்புமனு தாக்கல்..
சென்னையில் இன்று (25-04-2024) ஒரே நாளில் 28 பேர் வேட்புமனுக்களை தாக்கல் செய்துள்ளனர்.
தமிழ்நாட்டில் ஏப்ரல் 19-ம் தேதி மக்களவைத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு நடைபெறுவதை முன்னிட்டு கடந்த 20-ம் தேதி வேட்புமனு தாக்கல் தொடங்கியது. இந்த நிலையில் சென்னையில் உள்ள 3 மக்களவைத் தொகுதிகளில் மொத்தம் இன்று (25-04-2024) பிரதான கட்சிகளின் வேட்பாளர்கள், சுயேட்சை வேட்பாளர்கள் என 28 பேர் வேட்புமனு தாக்கல் செய்துள்ளனர்.
அதன்படி வடசென்னை தொகுதியில் பாஜக வேட்பாளர் பால் கனகராஜ், திமுக வேட்பாளர் கலாநிதி வீராசாமி , அதிமுக வேட்பாளர் ராயபுரம் மனோ, நாம் தமிழர் கட்சி வேட்பாளர் அமுதினி உள்ளிட்டோர் தேர்தல் நடத்தும் அலுவலரிடம் தங்களது வேட்புமனுக்களை தாக்கல் செய்தனர்.
இதேபோல் தென்சென்னை மக்களவைத் தொகுதியில் பாஜக வேட்பாளர் தமிழிசை சௌந்தரராஜன், திமுக வேட்பாளர் தமிழச்சி தங்கபாண்டியன், அதிமுக வேட்பாளர் ஜெயவர்தனும், மத்திய சென்னை தொகுதியில் பாஜக வேட்பாளர் வினோஜ் பி.செல்வம், தேமுதிக வேட்பாளர் பார்த்தசாரதி மற்றும் பல்வேறு கட்சிகளின் வேட்பாளர்கள், சுயேட்சை வேட்பாளர்கள் ஆகியோர் வேட்புமனுக்களை தாக்கல் செய்தனர்.
What's Your Reaction?