"இபிஎஸ் ஒரு வெற்று சவடால்" - நெல்லையில் முதலமைச்சர் விளாசல்...
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மக்களவைத் தேர்தல் பிரச்சாரம்
மக்களவைத் தேர்தலில் கூட்டணியை நம்பி அதிமுக இல்லை என்ற கபட நாடகத்தை எடப்பாடி நடத்துவதாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் விமர்சித்துள்ளார்.
தமிழ்நாட்டில் திமுக கூட்டணி, அதிமுக கூட்டணி, பாஜக கூட்டணி, நாம் தமிழர் என 4 முனைப்போட்டி ஏற்பட்டுள்ளது. திமுக தலைமையிலான கூட்டணியில் காங்கிரஸ், மதிமுக, விடுதலை சிறுத்தைகள், இந்திய கம்யூனிஸ்டு, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு, இந்திய யூனியன் முஸ்லிம்லீக், கொங்கு மக்கள் தேசிய கட்சி ஆகியவை இடம்பெற்றுள்ளன.
திருநெல்வேலி, கன்னியாகுமரி தொகுதியில் திமுக கூட்டணியில் இடம்பெற்றுள்ள காங்கிரஸ் வேட்பாளர்களை அறிமுகம் செய்துவைக்கும் கூட்டம் நெல்லை மாவட்டம் நாங்குநேரியில் நடைபெற்றது. நெல்லை தொகுதி காங்கிரஸ் வேட்பாளர் ராபர்ட் ப்ரூஸ், கன்னியாகுமரி தொகுதி காங்கிரஸ் வேட்பாளர் விஜய் வசந்த், விளவங்கோடு இடைத்தேர்தலில் போட்டியிடும் காங்கிரஸ் வேட்பாளர் தாரகை ஆகியோரை ஆதரித்து பரப்புரை செய்தார். கூட்டத்தில் பேசிய முதலமைச்சர், மக்களவைத் தேர்தலில் கூட்டணி நம்பி அதிமுக இல்லை என்ற கபட நாடகத்தை எடப்பாடி நடத்துவதாக விமர்சித்தார்.
மாநில உரிமை பறிப்பவர்கள் மீது ஒற்றை விரலால் ஓங்கி அடிப்போம் என பழனிசாமி விடுவது வெற்றுச் சவடால் எனவும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடுமையாக சாடினார்.
What's Your Reaction?