பாரிஸ் செஸ் தொடர்: உலக சாம்பியன் குகேஷ் உட்பட 3 இந்திய வீரர்கள் சொதப்பல்!

உலகின் 12 முன்னணி செஸ் வீரர்கள் பங்கேற்ற பாரிஸ் ஃப்ரீஸ்டைல் ​​செஸ் கிராண்ட்ஸ்லாம் தொடரில் சொதப்பிய இந்திய வீரர்கள்.

Apr 9, 2025 - 15:53
Apr 9, 2025 - 15:55
பாரிஸ் செஸ் தொடர்: உலக சாம்பியன் குகேஷ் உட்பட  3  இந்திய வீரர்கள் சொதப்பல்!
freestyle chess grand slam tour at paris

பாரிஸில் நடைப்பெற்று வரும் ஃப்ரீஸ்டைல் ​​செஸ் கிராண்ட்ஸ்லாம் தொடரின் ரேபிட் ரவுண்ட்-ராபின் லீக் போட்டியின் முடிவில் உலக சாம்பியன் குகேஷ் உட்பட இந்தியாவின் 3 வீரர்கள் காலிறுதி வாய்ப்பினை இழந்துள்ளது செஸ் ரசிகர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

செஸ் விளையாட்டில் உலகளவில் முன்னணி வகிக்கும் 12 வீரர்கள், பாரிஸில் நடைப்பெற்று வரும் ஃப்ரீஸ்டைல் ​​செஸ் கிராண்ட்ஸ்லாம் தொடரில் பங்கேற்றனர். ஏப்ரல் 7 ஆம் தேதி தொடங்கிய இத்தொடர் வருகிற 14 ஆம் தேதி வரை நடைப்பெற உள்ளது.

நம்பிக்கை தரும் அர்ஜூன்:

இந்தியாவிலிருந்து மட்டும் சுமார் 4 வீரர்கள் இத்தொடரில் விளையாட களமிறங்கினர். காலிறுதிப் போட்டிக்கு முந்தைய சுற்றான ரேபிட் ரவுண்ட்-ராபின் லீக் போட்டியின் முடிவில் உலக சாம்பியனான குகேஷ், விதித் குஜராத்தி, பிரக்ஞானந்தா ஆகிய 3 இந்தியர்கள் தொடரிலிருந்து வெளியேறினர். இந்தியாவை சேர்ந்த அர்ஜூன் எரிகைசி மட்டும் காலிறுதிப் போட்டிக்கு முன்னேறியுள்ளார்.

இன்று நடைப்பெறும் காலிறுதி ஆட்டத்தில் ஹிகாரு நகமுராவை எதிர்கொள்கிறார் அர்ஜூன். வின்செண்ட் கெய்மர், இயன் நெப்போமின்சாட்டி, கார்ல்சன், கருணா, வாச்சியர் , அப்டஸ்ட்ரோவ் ஆகியோர் காலிறுதிப் போட்டிக்கு முன்னேறியுள்ளனர். ஒரே நேரத்தில் இந்தியாவை சேர்ந்த 3 முன்னணி செஸ் வீரர்கள் தொடரிலிருந்து வெளியேறியுள்ளது இந்திய செஸ் ரசிகர்களை அதிர்ச்சியடைய செய்துள்ளது.

12 வீரர்களுடன் தொடங்கிய இத்தொடரில் 8 பேர் காலிறுதி ஆட்டத்திற்கு முன்னேறியுள்ளனர். போட்டித் தொடரில் வெற்றிப் பெறும் வீரருக்கு 2,00,000 அமெரிக்க டாலர்கள் (US$ 200,000) பரிசாக வழங்கப்பட உள்ளது குறிப்பிடத்தக்கது.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow