கீழடி அகழாய்வின் விரிவான அறிக்கை குறித்து மத்திய அரசு பதிலளிக்க உத்தரவு..!
"அமர்நாத் ராமகிருஷ்ணன் அறிக்கையை மத்திய அரசு பொதுவாக வெளியிட்டால் மட்டுமே கீழடியின் தெளிவான வரலாறு புலப்படும் "
மதுரையைச் சேர்ந்த பிரபாகரன் பாண்டியன் என்பவர் உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில் மனு ஒன்றைத் தாக்கல் செய்திருந்தார். அந்த மனுவில், “சிவகங்கை மாவட்டம் கீழடியில், தொல்லியல் ஆய்வாளர் அமர்நாத் ராமகிருஷ்ணன் மேற்பார்வையில், 2013 முதல் 2016-ம் ஆண்டு வரை அகழாய்வு பணி நடைபெற்றது. அப்போது, 5000-க்கும் மேற்பட்ட பழமை வாய்ந்த பொருட்கள் கிடைத்த நிலையில் , திடீரென அமர்நாத் ராமகிருஷ்ணன் பணியிட மாற்றம் செய்யப்பட்டார். பின்னர், அவரைத்தொடர்ந்து ஸ்ரீராமன் என்பவர் கீழடி தொல்லியல் பொறுப்பாளராக நியமிக்கப்பட்டார்.
ஸ்ரீராமன் நியமிக்கப்பட்டதற்கு பிறகு குறிப்பிடும் படியான எந்தவித கண்டுபிடிப்புகளும் இல்லை ; முதல் இரண்டு கட்ட ஆய்வுகளின் அறிக்கையை அமர்நாத் ராமகிருஷ்ணன் ஏற்கனவே மத்திய அரசிடன் தாக்கல் செய்திருந்தார். அந்த அறிக்கையில் கீழடியில் நிலவிய கலாச்சாரம், விவசாயம் செய்த பயிர்கள், விலங்குகள், நகரம் நாகரீகத்தை நோக்கி நகர்ந்த தன்மை குறித்து விரிவாக அமர்நாத் தெரிவித்துள்ளார்”, எனக் குறிப்பிட்டிருந்தார்.
மேலும், “கீழடியில் கிடைத்த பொருட்களை ரேடியோ கார்பன் எனும் பகுப்பாய்வு முறையில் ஆய்வு செய்ததில் கிட்டத்தட்ட 2600 ஆண்டுகளுக்கு முந்தையது எனத்தெரிய வந்தது.
கீழடியில் தற்போது 4 முதல் 9-ம் கட்ட அகழாய்வு பணிகளை மாநில அரசு மேற்கொண்டு அதுதொடர்பான அறிக்கைகளை வெளியிட்டுள்ளது. ஆனால் மத்திய அரசு மேற்கொண்ட முதல் 2 கட்ட அகழாய்வு பணிகள் குறித்த அறிக்கையை இதுவரை வெளியிடவில்லை.
எனவே, 982 பக்கமுடைய அமர்நாத் ராமகிருஷ்ணன் அறிக்கையை மத்திய அரசு பொதுவாக வெளியிட்டால் மட்டுமே கீழடி தொடர்பான தெளிவான வரலாற்று முடிவுகள் கிடைக்கும். எனவே கீழடியில் தொல்லியல் ஆய்வாளர் அமர்நாத் ராமகிருஷ்ணன் மேற்கொண்ட முதல் 2 கட்ட அகழாய்வு தகவல்கள் அடங்கிய விரிவான அறிக்கையை வெளியிட உத்தரவிட வேண்டும்”, என அந்த மனுவில் குறிப்பிட்டிருந்தார்.
இந்த ,மனுவை விசாரித்த நீதிபதிகள், இந்த வழக்கில் மத்திய அரசு பதிலளிக்க வேண்டும் என உத்தரவிட்டு இந்த வழக்கை 4 வாரங்களுக்கு ஒத்திவைத்தனர்.
இதையும் படிக்க | காங்கிரஸ் கண்மூடித்தனமாக நம்பும் நேரு, இடஒதுக்கீட்டுக்கு எதிரானவர் - பிரதமர் விமர்சனம்
What's Your Reaction?