தமிழக மீனவர்கள் 5 பேர் கைது- இலங்கை கடற்படை அட்டூழியம்

தமிழக மீனவர்கள் 37 பேர் இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்ட நிலையில், மேலும் 5 பேர் கைது செய்யப்பட்டுள்ளது மீனவர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Sep 23, 2024 - 08:23
தமிழக மீனவர்கள் 5 பேர் கைது- இலங்கை கடற்படை அட்டூழியம்
தமிழக மீனவர்கள் 5 பேர் கைது- இலங்கை கடற்படை அட்டூழியம்
எல்லைத் தாண்டி மீன்பிடித்ததாகத் தமிழக மீனவர்கள் 5 பேரை இலங்கை கடற்படை கைது செய்துள்ளது.
நெடுந்தீவு அருகே கடலில் மீன் பிடித்துக்கொண்டிருந்த கன்னியாகுமரியைச் சேர்ந்த 5 பேரை சிறைபிடித்த இலங்கை கடற்படை 1 படகையும் பறிமுதல் செய்துள்ளது. ஏற்கனவே தமிழக மீனவர்கள் 37 பேர் இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்ட நிலையில், மேலும் 5 பேர் கைது செய்யப்பட்டுள்ளது தமிழக மீனவர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கன்னியாகுமரியைச் சேர்ந்த மீனவர்களை உடனடியாக மீட்க மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என மீனவர் சங்கமும், கைதானவர்களின் குடும்பத்தினரும் கோரிக்கை வைத்துள்ளனர். ஏற்கனவே கைது செய்யப்பட்ட மீனவர்கள் மற்றும் அவர்களின் படகுகளை மீட்க மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கருக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதி இருந்தார். அதன் அடிப்படையில் சமீபத்தில் ராமேஸ்வரம் மீனவர்களை மொட்டை அடித்து விடுதலை செய்தது இலங்கை அரசு. மீனவர்கள் மொட்டை அடித்து விடுதலை செய்யப்பட்டது தமிழகத்தில் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியது. இதற்கு பல்வேறு கட்சிகள் மற்றும் மீனவ சங்கங்கள் எதிர்ப்பு தெரிவித்தன.இதைக் கண்டித்து ராமேஸ்வரம் மீனவர்கள் சார்பில் போராட்டமும் நடைபெற்றது. 
மேலும் இலங்கை அரசின் செயலுக்கு மத்திய அரசு கடும் எதிர்ப்பை தெரிவிக்க வேண்டும் எனக் கோரிக்கையும் எழுந்தது. இது குறித்து நேற்று பேசிய மத்திய இணையமைச்சர் எல்.முருகன், பாஜக  ஆட்சியில் மீனவர்களுக்காக ஏராளமான திட்டங்கள் செய்யப்பட்டுள்ளது. மீனவர்கள் கைது விவகாரத்தில் இலங்கை அரசிடம் பேசிய மீனவர்களை மீட்க உடனடி நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow