கர்நாடகாவில் 21 அடி ஆழ ஆழ்துளை கிணற்றில் விழுந்த 2 வயது சிறுவன்..

கர்நாடகாவில் ஆழ்துளைக் கிணற்றில் விழுந்த 2 வயது குழந்தை 18 மணி நேரத்திற்குப்பின் மீட்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

Apr 4, 2024 - 12:57
கர்நாடகாவில் 21 அடி ஆழ ஆழ்துளை கிணற்றில் விழுந்த 2 வயது சிறுவன்..

கர்நாடகாவின் விஜயபுரா மாவட்டத்தில் உள்ள லச்சியான் என்ற கிராமத்தில் சதீஷ் - பூஜா தம்பதியினர் வசித்து வந்தனர். இந்நிலையில் சதீசின் தந்தை சங்கரப்பா புதியதாக 16 அடி ஆழம் கொண்ட ஆழ்துளைக் கிணறு அமைத்த நிலையில், அதில் தண்ணீர் வராததால் அதனை மூடாமல் விட்டுள்ளார். 

இந்நிலையில் அங்கு விளையாடிக் கொண்டிருந்த குழந்தை, நேற்று மாலை 6.30 மணிக்கு ஆழ்துளைக் கிணற்றில் தவறி விழுந்தது. தொடர்ந்து குழந்தையின் அழுகுரல் கேட்டு குடும்பத்தினர் சென்று பார்த்தபோது, குழந்தை விழுந்தது தெரியவந்தது. இதையடுத்து தீயணைப்பு மற்றும் தேசிய பேரிடர் மீட்புப் படையினரின் பணிகள் முடுக்கி விடப்பட்டது.

ஆழ்துளைக் கிணற்றுக்கு இணையாக 21 அடி ஆழம் கொண்ட பள்ளம் ஏற்படுத்தப்பட்ட நிலையில், சிசிடிவி மூலம் சிறுவன் உயிருடன் இருப்பதாக கூறப்பட்டது. ஒரு கட்டத்தில் சிறுவனின் குரலே கேட்காத நிலையில், உடல் அசைவுகள் மட்டும் தென்பட்டதாகவும் தகவல் வெளியானது.

இந்நிலையில் ஆழ்துளைக் கிணற்றில் இருந்து சிறுவன் மீட்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இருப்பினும் சிறுவனின் உடல்நலம் தொடர்பான தகவல்கள் வெளியாகாதது குறிப்பிடத்தக்கது.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow