தஞ்சாவூரில் மாட்டு வண்டி ஓட்டி வந்த தேமுதிக வேட்பாளர்.. ஒரே அமர்களம்.. தடுமாறி விழுந்ததால் சோகம்

தஞ்சாவூர் மக்களவைத் தொகுதியில் போட்டியிடும் தேமுதிக வேட்பாளர் சிவநேசன் மாட்டு வண்டியில் சென்று வாக்கு சேகரித்த போது திடீரென தவறி விழுந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. 

Apr 4, 2024 - 12:51
தஞ்சாவூரில் மாட்டு வண்டி ஓட்டி வந்த தேமுதிக வேட்பாளர்.. ஒரே அமர்களம்.. தடுமாறி விழுந்ததால் சோகம்

மக்களவைத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு வரும் 19ஆம் தேதி நடைபெற உள்ளது. தேர்தல் நெருங்கி வரும் நிலையில் நாளுக்கு நாள் வேட்பாளர்களின் பிரசாரமானது தீவிரமடைந்துள்ளது. அந்த வகையில் தஞ்சை மக்களவைத் தொகுதியில் அதிமுக கூட்டணியில் இடம்பெற்றுள்ள தேமுதிக சார்பில் சிவநேசன் போட்டியிடுகிறார். 

திருவையாறு சட்டசபைத் தொகுதிக்கு உட்பட்ட மாத்தூர், மாத்தூர் கிழக்கு, மேற்கு, நல்லிச்சேரி உள்ளிட்ட கிராமங்களில் அவர் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். மாத்தூர் காளியம்மன் கோயிலில் வழிப்பட்ட வேட்பாளர் சிவநேசனுக்கு கோயில் பூசாரிகள் பூர்ண கும்ப மரியாதையுடன் பரிவட்டம் கட்டி வரவேற்றார். பின்னர் வாக்கு கேட்டு வந்த அவருக்கு கூடியிருந்த பெண்கள் பூக்கள் தூவியும், ஆரத்தி எடுத்தும் ஆட்டம் பாட்டத்துடன் உற்சாக வரவேற்பு அளித்தனர்.

அப்போது கூட்டத்தில் இருந்த பெண் ஒருவர் திடீரென சாமியாடி குறி சொன்னதால் அவரது காலில் விழுந்து சிவநேசன் ஆசி பெற்றார். தொடர்ந்து அங்கிருந்த இளநீர் கடையில் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்ட அவர், தன்னோடு வந்த கட்சி நிர்வாகிகளுக்கு இளநீர் வெட்டி கொடுத்தார்.

பின்னர் மாத்தூர் சாலையில் இரட்டை மாட்டு வண்டி ஒட்டி வாக்கு சேகரித்து வந்தபோது மாடு மிரள வண்டியில் இருந்து எதிர்பாராத விதமாக கால் இடறி கீழே விழுந்தார். அப்போது சுற்றியிருந்த தொண்டர்கள் சுதாரித்துக் கொண்டு சிவநேசனை பத்திரமாக பாய்ந்து பிடித்தனர்.  தடுமாறிய பின்னர் சுதாரித்த சிவனேசன். 
தொடர்ந்து பல்வேறு பகுதிகளில் பிரசாரத்தில் ஈடுபட்டார்.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow