கொலை மிரட்டல் : சிவகங்கை பாஜக மாவட்டத் தலைவர் மீது வழக்கு

இதுகுறித்தான ஆடியோ சமூகவலைதளங்களில் வைரலாக பரவியுள்ளது.

Dec 11, 2023 - 13:12
Dec 11, 2023 - 15:24
கொலை மிரட்டல் :  சிவகங்கை பாஜக மாவட்டத் தலைவர்  மீது வழக்கு

சிவகங்கை மாவட்டத்தின் மக்கள் அதிகாரம் அமைப்பின் மாவட்டத் துணைச் செயலாளரை மிட்டியதாக பாஜக சிவகங்கை மாவட்டத் தலைவர் மேப்பல் சக்தி உட்பட இருவர் மீது 294/p -506/1 ஆகிய இரு பிரிவில் போலீஸார் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.

காளையார்கோவிலை சேர்ந்தவர் வைகை சரவணன் (44).இவர் மக்கள் அதிகாரம் சிவகங்கை மாவட்டத் துணைச் செயலாளராக உள்ளார். இவர் தனது இயக்க மாநாட்டிற்க்காக பாஜகவை விமர்சித்து காளையார்கோவிலில் சுவர் விளம்பரம் செய்தார்.

பாஜகவை விமர்சித்ததால் ஆத்திரமடைந்த மாவட்டத் தலைவர் மேப்பல்சக்தி , கருப்பையா என்பவர் மூலம் வைகை சரவணனை செல்போனில் தொடர்பு கொண்டு  மிரட்டினர்.அப்போது பா.ஜ.க மாவட்ட தலைவர்  மேப்பல் சக்தி  போனில் மிரட்டி பேசியதோடு கொலை மிரட்டல் விடுத்துள்ளார்.  

இதுகுறித்து வைகை சரவணன் அளித்த புகாரின் பேரில் காளையார்கோவில் போலீஸார் பாஜக மாவட்ட தலைவர் மேப்பல் சக்தி, நிர்வாகி கருப்பையா ஆகிய இருவர் மீது இரு பிரிவில் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.இதுகுறித்தான ஆடியோ சமூகவலைதளங்களில் வைரலாக பரவியுள்ளது.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow