கொலையில் முடிந்த பணத் தகராறு.. மனைவியை குத்திக்கொன்ற கணவர் தற்கொலை முயற்சி..

சென்னையில் பண விவகாரத்தில் மனைவியை கத்தியால் குத்தி கொலை செய்த கணவன் தானும் கத்தியால் குத்திக் கொண்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது

May 6, 2024 - 22:06
கொலையில் முடிந்த பணத் தகராறு.. மனைவியை குத்திக்கொன்ற கணவர் தற்கொலை முயற்சி..

சென்னை வண்ணாரப்பேட்டை மூலக்கொத்தளம் பகுதியை சேர்ந்தவர் செல்வம் - பத்மினி தம்பதிக்கு திருமணமாகி 35 ஆண்டுகளான நிலையில் அவர்களுக்கு பாலாஜி என்ற மகனும், ஒரு மகளும் உள்ளனர். 

அசோக் லேலாண்டில் வேலை செய்து வந்த செல்வம் கடந்த 8 ஆண்டுகளுக்கு முன்பு விஆர்எஸ் பெற்று வீட்டில் வசித்து வருகிறார். இந்நிலையில் கணவன் மனைவிக்கு இடையே நேற்றிரவு (மே 5) பணத் தகராறு ஏற்பட்டதாக கூறப்படுகிறது.

அப்போது வீட்டில் சமையல் செய்ய பயன்படுத்தப்படும் கத்தியை கொண்டு மனைவி பத்மினியை 7 இடங்களில் சரமாரியாக செல்வம் குத்தி உள்ளார். இதில் ரத்த வெள்ளத்தில் இருந்த பத்மினி சம்பவ இடத்திலேயே சரிந்து விழுந்துள்ளார்.  

இதனால் செய்வதறியாது திகைத்த செல்வம், மனைவியை கொன்றதை அறிந்து தனக்கு தானே கத்தியால் குத்தி கொண்டு தற்கொலைக்கு  முயன்றுள்ளார். இதனால் பலத்த காயமடைந்து உயிருக்கு போராடிய  இருவரையும் மகன் பாலாஜி அரசு ஸ்டான்லி மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்துள்ளார். 

சுயநினைவின்றி இருவரும் சிகிச்சை பெற்று வந்த நிலையில் அதிகாலை பத்மினி சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். பலத்த காயமடைந்த செல்வம் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இச்சம்பவம் குறித்து வண்ணாரப்பேட்டை போலீசார் விசாரணை செய்து வருகின்றனர். கணவனே மனைவியை குத்தி கொலை செய்தது அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow