நடுராத்திரியில் மது தேடிச் சென்ற மூவர்...மது அருந்திக் கொண்டிருந்தவரை சம்பவம் செய்ததால் பரபரப்பு...

தஞ்சையில் நள்ளிரவில் மது கிடைக்காததால், மதுகுடித்துக் கொண்டிருந்த நபரை, இளைஞர்கள் மூவர் அடித்துக் கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

May 7, 2024 - 20:28
நடுராத்திரியில் மது தேடிச் சென்ற மூவர்...மது அருந்திக் கொண்டிருந்தவரை சம்பவம் செய்ததால் பரபரப்பு...

தஞ்சாவூர் மாவட்டம் சாணூரப்பட்டி பகுதியை சேர்ந்தவர் ஹரிஹரன் (27) . இவர் திருப்பூரில் உள்ள தனியார் நிறுவனத்தில் பணியாற்றி வந்த நிலையில் விடுமுறைக்காக ஊருக்கு வந்துள்ளார். இந்நிலையில், அவர் தனது நண்பர்களுடன் சேர்ந்து, தஞ்சாவூர் புதிய பேருந்து நிலையம் பகுதியில் இரவு 11 மணியளவில் மது அருந்தியுள்ளார். 

10 மணிக்கு மேல் மதுபான கடைகள் இல்லாததால், அங்கு வந்த மூன்று இளைஞர்கள் மது எங்கு விற்கிறது என கேட்டுள்ளனர். அதற்கு நாங்கள் மது விற்கவில்லை என ஹரிஹரனும் அவரது நண்பர்களும் கூறியுள்ளனர். இதனால் இரு தரப்புக்கும் வாக்குவாதம் ஏற்பட்டு கைகலப்பாக மாறியுள்ளது. இந்த சண்டையில் கீழே விழுந்த ஹரிஹரனை அந்த இளைஞர்கள் சரமாரியாக தாக்கியுள்ளனர். இதில் அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

இதுகுறித்து தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த போலீசார், ஹரிஹரனின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக தஞ்சை அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இதுதொடர்பாக வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இதுதொடர்பாக திருவையாறு அருகேயுள்ள கண்டியூர் பகுதியைச் சேர்ந்த முகேஷ் (21), அன்சாரி (26), மகேஸ்வரன் ஆகிய மூன்று பேரையும் பிடித்து விசாரணை செய்து வருகின்றனர்.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow