அழிவின் விழிம்பில் 6 லட்சம் குழந்தைகள்... எச்சரிக்கும் UNICEF!..இக்கட்டான சூழலில் ரஃபா..

உலகநாடுகளின் வலியுறுத்தலை கண்டுக்கொள்ளாமல் கடும் தாக்குதலை இஸ்ரேல் நடத்தி வருகிறது- UNICEF

May 6, 2024 - 22:04
அழிவின் விழிம்பில் 6 லட்சம் குழந்தைகள்... எச்சரிக்கும் UNICEF!..இக்கட்டான சூழலில் ரஃபா..

போர் காரணமாக எகிப்து எல்லையான ரஃபாவில் தஞ்சமடைந்துள்ள 6 லட்சத்துக்கும் அதிகமான குழந்தைகள் பேரழிவின் விழிம்பில் உள்ளதாக ஐக்கிய நாடுகளின் சிறுவர் நிதியமான UNICEF எச்சரித்துள்ளது. 

கடந்தாண்டு அக்டோபர் மாதம் 7ஆம் தேதி, திடீரென வடக்கு காசா வழியாக இஸ்ரேலுக்குள் நுழைந்த ஹமாஸ் படையினர், அதிரடி தாக்குதலை நடத்தி பல இஸ்ரேலியர்கள், வெளிநாட்டவர்களை பிணையக்கைதிகளாக பிடித்துச்சென்றனர். 

இந்த தாக்குதலால் உருக்குலைந்த இஸ்ரேல், ஹமாஸை ஒட்டுமொத்தமாக அழித்தே தீருவோம் என சபதம் எடுத்து ராணுவ நடவடிக்கையில் இறங்கியது. அதைதொடர்ந்து இதுவரை பார்த்திறாத ஒரு உக்கிரமான தாக்குதல் மத்திய தரைக்கடல் பகுதியில் நிகழ்ந்தது. ஆயிரக்கணக்கான ஹமாஸ் படையினர் மட்டுமின்றி கொத்துக் கொத்தாக பொதுமக்களும் உயிரிழந்தனர். 

தொடர்ந்து வடக்கு காசாவை கைப்பற்ற, அங்கிருந்த மக்களை தெற்கு காசாவுக்கு இஸ்ரேல் துரத்தியது. இதில் எகிப்து எல்லையான ரஃபா நகரில் பெரும்பாலுமான மக்கள் தஞ்சமடைந்தனர். ஆரம்பத்தில் இஸ்ரேலுக்கு பயங்கர ஆயுதங்களை தந்து உதவிய அமெரிக்க, போக போக இஸ்ரேலின் நடவடிக்கைகளை கைவிட்டு போரை கைவிடவும் வலியுறுத்தியது. 

உலகநாடுகளின் வலியுறுத்தலை கண்டுக்கொள்ளாமல் கடும் தாக்குதலை இஸ்ரேல் நடத்தி வரும் நிலையில், 38,000 பாலஸ்தீனியிர்கள் கொல்லப்பட்டனர்.

ஐக்கிய நாடுகளின் சிறுவர் நிதியமான UNICEF கூற்றுப்படி, ரஃபாவில் உள்ள பாலஸ்தீன மக்களில் பாதிக்கு பாதி குழந்தைகள் தான் என்கிறது. ஏனெனில், பெரும்பாலான முதியவர்கள், இளைஞர்கள் போரில் உயிரிழந்துவிட்டதாகவும் தெரிவிக்கிறது. 

இதுகுறித்து பேசிய UNICEFன் இயக்குநர் கேத்தரின் ரஷுல், ரஃபா இப்போது ஒரு குழந்தைகள் நகரமாக உள்ளது என்றார். காசாவில் எங்கும் பாதுகாப்பான சூழல் இல்லை, இதனால் பெரிய அளவிலான ராணுவ நடவடிக்கை பேராபத்தை ஏற்படுத்தும் என்றார். 

5 வயதுக்குட்பட்ட 1,75,000 குழந்தைகள் தொற்று நோயால் பாதிக்கப்பட்டுள்ளனர். சராசாரியாக இரண்டரை லட்சம் மக்கள் மட்டுமே வசிக்கக்கூடிய நகரமான ரஃபாவில் தற்போது, 12 லட்சத்துக்கும் அதிமான மக்கள் தஞ்சம் புகுந்துள்ளதால், உணவு பற்றாக்குறையும் ஏற்பட்டுள்ளது. இதனால் அங்குள்ள 6,00,000 அதிகமான குழந்தைகள் அழிவை நோக்கி செல்கிறார்கள் என அவர் எச்சரித்துள்ளார். இதனால் உலகநாடுகளின் உடனடி நடவடிக்கை தேவை என்கிறது UNICEF...

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow