உருவானது காற்றழுத்த தாழ்வு பகுதி:தமிழகத்தில் மீண்டும் கனமழைக்கு வாய்ப்பு
வங்கக்கடலில் உருவான குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி வலுப்பெற்றது என்று இந்திய வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.
தமிழகத்தில் நவம்பர், டிசம்பர் மாதங்களில் கனமழை பெய்த்தது. டிசம்பர் கடைசி வாரத்தில் இருந்து தமிழகத்தில் பனிபொழிவு இருந்து வருகிறது. இந்நிலையில், டிசம்பர் 31 மற்றும் ஜனவரி 1-ம் தேதி சென்னை, திருவள்ளூர் உள்ளிட்ட சில மாவட்டங்களில் மழை பெய்தத்தது.
வடகிழக்கு பருவமழை குறைந்து இருந்த நிலையில், ஜனவரி 8-ம் தேதி முதல் மீண்டும் தமிழகத்தில் கனமழை பெய்யும் என இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இதுகுறித்து ஆய்வு மையம் கூறியிருப்பதாவது : தெற்கு வங்கக்கடலில் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக வலுவடைந்தது. அடுத்த 48 மணி நேரத்தில் மேற்கு வடமேற்கு திசையில் தென்மேற்கு வங்கக் கடல் பகுதிகளை நோக்கி நகரக்கூடும்.
தமிழகத்தில் கடுமையான குளிர் நிலவி வரும் நிலையில் அதற்கு விடை கொடுத்து மழையை வரவேற்பதற்கான காலநிலை மாற்றம் தொடங்கி இருக்கிறது. வங்க கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகியுள்ளதாகவும், இது அடுத்த 24 மணி நேரத்தில் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக வலுப்பெறலாம் என இந்திய வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது.
ஜனவரி 8-ம் தேதி முதல் டெல்டா மாவட்டங்களில் கனமழை பெய்யும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. வடகடலோர மாவட்டங்களிலும் கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
What's Your Reaction?

