தங்கம், வெள்ளி விலை மீண்டும் உயர்வு: சவரனுக்கு ரூ.560 அதிகரிப்பு : நகைப்பிரியர்கள் அதிர்ச்சி
கடந்த வாரங்களில் ஓரளவுக்கு குறைந்து வந்த தங்கம், வெள்ளி விலை, திரும்பவும் உயர தொடங்கி இருப்பது நகைப்பிரியர்களுக்கு அதிர்ச்சி தரும் செய்தியாக அமைந்து இருக்கிறது.
வார தொடக்க நாளான நேற்று காலை சென்னையில் ஆபரணத்தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.640 உயர்ந்து ரூ.1,01,440க்கு விற்பனை செய்யப்பட்டது. சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.80 உயர்ந்து ரூ.12,680க்கு விற்பனை செய்யப்பட்டது.
இதே போன்று சென்னையில் சில்லறை வர்த்தகத்தில் ஒரு கிராம் வெள்ளி விலை கிராமுக்கு ரூ.8 உயர்ந்து ரூ.265க்கு விற்பனை ஆகிறது. கிலோவிற்கு ரூ 8 ஆயிரம் உயர்ந்து, ஒரு கிலோ வெள்ளி 2,65,000 விற்பனை ஆகிறது. வார தொடக்க நாளில் தங்கம், வெள்ளி விலை உயர்ந்துள்ளது.
மாலையில் மீண்டும் தங்கம் விலை உயர்ந்தது. சவரன் ரூ. 640 உயர்ந்து, ஒரு கிராம் தங்ம் ரூ.12,760 க்கு விற்பனை ஆனது. கிராமுக்கு ரூ. 80 உயர்ந்து சவரன் ரூ.1,02,080-க்கு விற்பனை ஆனது. ஓரே நாளில் சவரன் ரூ.1280 விலை உயர்ந்தது.
இந்த நிலையில், இன்று தங்கம் கிராமுக்கு ரூ.70 உயர்ந்து ஒரு கிராம் ரூ.12,830க்கும், சவரனுக்கு ரூ.560 உயர்ந்து ஒரு சவரன் ரூ.1,02,640க்கும் விற்பனை செய்யப்படுகிறது. அதே போல 18 காரட் தங்கம் விலையும் கிராமுக்கு ரூ.50 உயர்ந்து ஒரு கிராம் ரூ.10,700க்கும் சவரனுக்கு ரூ.400 உயர்ந்து ஒரு சவரன் ரூ.85,600க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
அதே போன்று இன்று வெள்ளி விலையும் அதிரடியாக கிராமுக்கு ரூ.5 உயர்ந்து ஒரு கிராம் ரூ.271க்கும், கிலோவுக்கு மட்டுமே ரூ.5000 உயர்ந்து ஒரு கிலோ ரூ.2,71,000க்கும் விற்பனை செய்யப்படுகிறது. தங்கம், வெள்ளி விலை மீண்டும் உயர்ந்து இருப்பது நகைப்பிரியர்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
What's Your Reaction?

