மழைக்காக லீவு கேள்விப்பட்டிருப்போம்..வெயிலுக்காக 4 நாள் லீவாம்.. எங்க தெரியுமா?

கடும் வெயில் காரணமாக அசாம் தலைநகர் கவுகாத்தியில் பள்ளிகளுக்கு 4 நாட்கள் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.

Sep 24, 2024 - 07:50
மழைக்காக லீவு கேள்விப்பட்டிருப்போம்..வெயிலுக்காக 4 நாள் லீவாம்.. எங்க தெரியுமா?

கடும் வெயில் காரணமாக அசாம் தலைநகர் கவுகாத்தியில் பள்ளிகளுக்கு 4 நாட்கள் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.

பாத்ரூமிற்கு போய் குழாயை திறந்து விட்டாலே தண்ணீர் தகிக்கிறது. இது புரட்டாசியா சித்திரை மாத அக்னி நட்சத்திர காலமா என்ற சந்தேகம் பலருக்கும் எழும் அளவிற்கு வெயில் சுட்டெரிக்கிறது.

தென்மேற்கு பருவமழை காலத்தில் அக்னியை வாரி இறைத்தது போல அனல் காற்று வீசுகிறது. சுட்டெரிக்கும் வெயிலின் வேகத்தை தாக்கு பிடிக்க முடியாமல் மக்கள் வீட்டிற்குள் முடங்கத் தொடங்கியுள்ளனர். அப்படி செப்டம்பர் மாதத்தில் தமிழ்நாட்டில் அதிகபட்ச வெப்பநிலை பதிவாகியிருந்தது.

இப்படி உலகமே காலநிலை மாற்றத்தால் கொழுந்துவிட்டு எரிவதால், ஆங்காங்கே எரிமலை வெடிப்பும், காட்டுத் தீயும், கடல் உள்வாங்குவதும், பனிமலை உருகுவது என பல மோசமான விஷயங்கள் நடைபெற்று வருகின்றது. 

இந்நிலையில், தமிழ்நாடு போலவே அசாம் மாநிலம் முழுவதும் கடும் வெயில் வாட்டி வதைக்கிறது. தலைநகர் கவுகாத்தி, கச்சார், பார்பேடா உள்ளிட்ட மாநிலத்தின் பல பகுதிகளில் கடந்த சில நாட்களாக 100 டிகிரி பாரன்ஹீட்டை தாண்டி வெயில் பதிவாகி உள்ளது. வெப்ப அலைவீச்சு காரணமாக அங்குள்ள மக்கள் மதிய நேரங்களில் வீட்டைவிட்டு வெளியேற முடியாமல் தவித்து வருகின்றனர்.

வரும் நாட்களில் வெயிலின் தாக்கம் மேலும் அதிகரிக்கும் என வானிலை ஆராய்ச்சி மையம் தகவல் தெரிவித்துள்ளது. இந்தநிலையில் கவுகாத்தி உள்ளிட்ட நகர பகுதிகள் அடங்கிய காம்ரூப் மாவட்டத்தில் வெயில் தாக்கம் காரணமாக தொடக்கப்பள்ளிகளுக்கு இன்று முதல் வருகிற 27-ந் தேதி வரை 4 நாட்களுக்கு விடுமுறை அளித்து கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow