காஷ்மீராக மாறிய ஊட்டி:வெப்பநிலை மைனஸ் 1 டிகிரி பதிவு , உறைபனியால் சுற்றுலா பயணிகள் தடை?

காஷ்மீர் போல காட்சி அளிக்கும் ஊட்டியில், சுற்றுலா பயணிகள் உறைபனியால் பெரும் இன்னலை சந்தித்து வருகின்றனர். 

காஷ்மீராக மாறிய ஊட்டி:வெப்பநிலை மைனஸ் 1 டிகிரி பதிவு , உறைபனியால் சுற்றுலா பயணிகள் தடை?
Ooty turns into Kashmir: Tourists banned due to frost?

நீலகிரி மாவட்டம் உதகையில் கடந்த சில நாட்களாக நிலவி வரும் கடும் உறைபனியால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. நீலகிரி மாவட்டம் முழுவதும் கடந்த 10 நாட்களாக உறைபனி நிலவி வருகிறது.

குறிப்பாக, உதகையில் வெப்பநிலை மைனஸ் ஒரு டிகிரி செல்சியஸ் என்ற அளவில் பதிவானது. இதனால் நகரின் பல்வேறு பகுதிகள் வெண்போர்வை போர்த்தியது போல் காட்சியளித்தன.

உதகை தாவரவியல் பூங்கா, குதிரைபந்தய மைதானம் மற்றும் அதனைச்சுற்றியுள்ள பகுதிகளில் உறைபனி காணப்பட்டது. சாலையோரம் நிறுத்தப்பட்ட வாகனங்களின் மீது பனிப்படர்ந்து காட்சியளித்தது.

பொதுவாக நவம்பர் மற்றும் டிசம்பர் மாதங்களில் காணப்படும் உறைபனி இந்த முறை ஜனவரி மாதம் வரை நீடிக்கும் என கருதப்படுகிறது. தொடர்ந்து நீடிக்கும் உறைப்பனிகாரணமாக தேயிலைத் தோட்டதொழிலாளர்கள், பொதுமக்கள் உள்ளிட்டோர் கடும் சிரமத்திற்குள்ளாகி வருகின்றனர்.

ஊட்டி உறைபனியை காண செல்லும் சுற்றுலா பயணிகளுக்கு வனத்துறையினர் தடை விதித்துள்ளனர். உறை பனியை காண வனத்துறையினர் எச்சரிக்கை பலகை வைத்துள்ள இடத்தை தாண்டி பாதுகாக்கப்பட்ட வனப்பகுதிக்குள் சுற்றுலா பயணிகள் செல்ல வேண்டாம் என வனத்துறை அறிவுறுத்தி உள்ளது. 

அரசு தாவரவியல் பூங்கா, தலைக்குந்தா, காந்தள், அவலாஞ்சியில் தொடர்ந்து காலை நேரங்களில் ஐந்து டிகிரி செல்சியஸ்-க்கும் கீழ் வெப்பம் பதிவாகி வருவதால் கடும் குளிர் நிலை காணப்படுகிறது.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow