தீபாவளி போனஸ்.. அரசு கொடுத்த ஆஹா அறிவிப்பு
தமிழ்நாடு அரசின் அனைத்து பொதுத்துறை நிறுவனங்களின் ஊழியர்களுக்கும் தீபாவளி போனஸ் வழங்க முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.
தமிழ்நாடு அரசின் அனைத்து பொதுத்துறை நிறுவனங்களின் ஊழியர்களுக்கும் தீபாவளி போனஸ் வழங்க முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.
வருகிற அக்டோபர் 31ம் தேதி நாடு முழுவதும் தீபாவளி பண்டிகை கொண்டாடப்பட உள்ளது. இந்நிலையில் அனைத்து அரசு பொதுத்துறை நிறுவனங்களில் பணிபுரியும் c மற்றும் d பிரிவு தொழிலாளர்களுக்கு 20 சதவீதம் வரை போனஸ் வழங்க முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.
இது தொடர்பாக வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், மிகை ஊதியம் பெற தகுதியுள்ள நிரந்தரத் தொழிலாளர்கள் குறைந்த பட்சம் 8 ஆயிரத்து 400 ரூபாயும், அதிகபட்சம் 16 ஆயிரத்து 800 ரூபாயும் பெறுவார்கள் என கூறப்பட்டுள்ளது.
தமிழ்நாடு அரசின் பொதுத்துறை நிறுவனங்களில் பணிபுரியும் 2 லட்சத்து 75 ஆயிரத்து 670 தொழிலாளர்களுக்கு 369 கோடியே 65 லட்சம் ரூபாய் போனஸ் மற்றும் கருணைத் தொகையாக வழங்கப்பட்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதை தவிர பல்வேறு கூட்டுறவு அமைப்புகள் மற்றும் நிறுவனங்களில் பணிபுரியும் பணியாளர்களுக்கான ஆணைகள் தனியே வெளியிடப்படும் என குறிப்பிடப்பட்டுள்ளது.
அரசின் இந்த நடவடிக்கையால் பொதுத்துறை நிறுவனங்களில் பணியாற்றும் தொழிலாளர்கள் மிகவும் ஊக்கத்துடன் பணியாற்றுவதுடன், எதிர்வரும் விழாக்காலங்களை மகிழ்ச்சியுடன் கொண்டாட வழிவகை செய்யும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
What's Your Reaction?