லாரி மீது கார் மோதி விபத்து.. ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 4 பேர் பலி... செங்கல்பட்டு அருகே சோகம்

செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகம் அருகே லாரி மீது கார் மோதிய விபத்தில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 4 பேர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

May 15, 2024 - 12:25
லாரி மீது கார் மோதி விபத்து.. ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 4 பேர் பலி... செங்கல்பட்டு அருகே சோகம்

கடலூர் மாவட்டம் மேல்பட்டம்பாக்கம் பகுதியை சேர்ந்தவர் அப்துல். இவர் வேலை காரணமாக துபாய் செல்கிறார். இந்நிலையில், அவரது  குடும்பத்தினர் சென்னை விமான நிலையத்திற்கு வந்து அவரை வழியனுப்பி வைத்துவிட்டு, சொந்த ஊர் திரும்பியுள்ளனர்.  அப்போது, மதுராந்தகம் அடுத்த சிலாவட்டம் என்ற இடத்தில் முன்னால் சென்ற லாரி மீது எதிர்பாராதவிதமாக இவர்கள் சென்ற கார் பயங்கரமாக மோதி விபத்துக்குள்ளானது.

இந்த விபத்தில், காரில் பயணம் செய்த அப்துலின் மனைவி ஜெய்பினிஷா மற்றும் அவரது மகன்கள்,  விஷால், அக்பர், பைசல் ஆகிய 4 பேரும் உடல் நசுங்கி உயிரிழந்தனர். காரை ஓட்டிச்சென்ற சரவணன், படுகாயமடைந்து, செங்கல்பட்டு அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.  

இந்த விபத்து குறித்து மதுராந்தகம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். கணவர் துபாய்க்கு சென்ற நிலையில், மனைவி மற்றும் குழந்தைகள் என குடும்பத்தினர் அனைவரும் விபத்தில் சிக்கி உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow