கல்வி நிறுவனத்தில் பயங்கர தீ விபத்து!

மின்கசிவு காரணமாக தீ விபத்து ஏற்பட்டிருக்கலாம் என கூறப்படும் நிலையில், போலீசார் விசாரணை

கல்வி நிறுவனத்தில் பயங்கர தீ விபத்து!

 விசாகப்பட்டினம் அருகே கல்வி நிறுவனம் ஒன்றில் ஏற்பட்ட பயங்கர தீ விபத்தில், பல லட்சம் ரூபாய் மதிப்பிலான பொருட்கள் தீக்கிரையாகின. 

ஆந்திர பிரதேச மாநிலம், விசாகப்பட்டினம் அருகே உள்ள காஜுவாக்கா நகரில் ஆகாஷ் பைஜூஸ் கல்வி நிறுவனம் செயல்பட்டு வருகிறது. அந்த நிறுவனத்தின் கட்டிடத்தில்  இன்று காலை திடீரென்று பயங்கர தீ விபத்து ஏற்பட்டது.

தீ விபத்து காரணமாக அந்த கட்டிடத்தின் தரைத்தளத்தில் உள்ள அறைகள் முழுவதுமாக தீப்பற்றி எரிந்து அங்கு வைக்கப்பட்டிருந்த கணினிகள் , மேஜை நாற்காலிகள் ஆகியவை தீக்கிரையாகிய நிலையில், யாரும் இல்லாததால் பெரும் உயிர்சேதம் தவிர்க்கப்பட்டது.

இந்த தீ விபத்தால் அந்த பகுதியே கரும் புகை சூழ்ந்து காணப்பட்டது. தொடர்ந்து இது குறித்த தகவலின் பேரில் அங்கு வந்த தீயணைப்புப்படையினர் கடும் போராட்டத்திற்கு மத்தியில் தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனர். மின்கசிவு காரணமாக தீ விபத்து ஏற்பட்டிருக்கலாம் என கூறப்படும் நிலையில்,  இது குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow