இனி இவர்களுக்கும் அரசுப்பணி? - அமைச்சர் மா.சு அறிவிப்பு

ஒரு மருத்துவர் பணிக்காலத்தில் உயிரிழந்தால், அவரது வாரிசுகள் பணிக்காக 3 ஆண்டுகளுக்குள் பதிவு செய்ய வேண்டும்.

Feb 27, 2024 - 11:50
இனி இவர்களுக்கும் அரசுப்பணி? -  அமைச்சர் மா.சு அறிவிப்பு

பணிக் காலத்தில் உயிரிழக்கும் மருத்துவர்களின் வாரிசுகளுக்கும் கருணை அடிப்படையில் பணி வழங்கப்படும் என அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.

அரசு மருத்துவர்களுக்கு சேமநல நிதி வழங்கும் நிகழ்ச்சி இன்று சென்னை தேனாம்பேட்டையில் நடைபெற்றது. இதில் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் கலந்துகொண்டு 7 மருத்துவர்களுக்கு சேமநல நிதிக்கான காசோலையை வழங்கினார்.

இதைத்தொடர்ந்து செய்தியாளர்களைச் சந்தித்த அவர், அரசின் மற்ற துறைகளில் கருணை அடிப்படையில் அரசு ஊழியர்களின் வாரிசுகளுக்கு பணி வழங்கப்படுகிறது. அதேபோல், மருத்துவத்துறையிலும் வாரிசுகளுக்கு கருணை அடிப்படையில் பணி வழங்கப்படும்.

ஒரு மருத்துவர் பணிக்காலத்தில் உயிரிழந்தால், அவரது வாரிசுகள் பணிக்காக 3 ஆண்டுகளுக்குள் பதிவு செய்ய வேண்டும். அவர்களது கல்வித் தகுதிக்கு ஏற்றவாறு, இளநிலை உதவியாளர், தட்டச்சர், அலுவலக உதவியாளர் ஆகிய மூன்று பணிகளில் ஒரு பணி வழங்கப்படும்" என  தெரிவித்தார்.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow