கைக்குழந்தையுடன் நாள்தோறும் கல்லூரிப்படிப்பு... நரிக்குறவர் இனப்பெண்ணுக்கு அரசு உதவுமா?!

Mar 10, 2024 - 09:55
கைக்குழந்தையுடன் நாள்தோறும் கல்லூரிப்படிப்பு...  நரிக்குறவர் இனப்பெண்ணுக்கு அரசு உதவுமா?!

தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணம் அருகே உள்ள திருவலஞ்சுழி ஏழுமாந்திடல் பகுதியில் வசித்து வரும்  சந்தியா, சுரேஷ் தம்பதிக்கு 11 மாத ஆண் குழந்தை உள்ளது. இவர்கள் நரிக்குறவர் இன  சமூகத்தை சேர்ந்தவர்கள் ஆவர். பி.ஏ தமிழ் முடித்த சந்தியா, தற்போது  பி.எட். இரண்டாம் ஆண்டு மேற்படிப்பு படித்து வருகிறார். நாள்தோறும் திருவலஞ்சுழியில் இருந்து அய்யம்பேட்டைக்கு சந்தியா, தனது 11 மாத கைக் குழந்தையை தோளில் சுமந்தபடி கல்வி பயில வருவது காண்போரை நெகிழ வைத்துள்ளது.  

தனது இல்லத்தில் 10-க்கும் மேற்பட்ட நரிக்குறவர் இன மாணவ மாணவிகளுக்கு, தமிழக அரசின் இல்லம் தேடிக் கல்வி வகுப்புகளையும் சந்தியா பயிற்றுவித்து வருகிறார். இந்நிலையில் அரசு வேலை கிடைத்தால் தங்கள் இனத்தை சேர்ந்தவர்களை முன்னேற்ற முடியும் என்பதால் தமிழக அரசு முன்வந்து, அரசு வேலை வழங்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளார். அவரது கோரிக்கை நிறைவேற்றப்பட வேண்டும் என்பதே அனைவரது கோரிக்கையாக உள்ளது.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow