"அநாகரிக அரசியல் செய்யும் அண்ணாமலை" - ராஜன் செல்லப்பா கடும் தாக்கு

Apr 14, 2024 - 14:54
"அநாகரிக அரசியல் செய்யும் அண்ணாமலை" - ராஜன் செல்லப்பா கடும் தாக்கு

அதிமுகவின் வரலாறு தெரியாமல் பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை பேசுவதாகவும், அவர் அநாகரிக அரசியல் செய்வதாகவும் அதிமுக எம்எல்ஏ ராஜன் செல்லப்பா குற்றஞ்சாட்டியுள்ளார்.

மதுரை மக்களவைத் தொகுதி அதிமுக வேட்பாளர் சரவணனை ஆதரித்து அக்கட்சியின் எம்.எல்.ஏ., ராஜன் செல்லப்பா ஆத்திக்குளம், நாராயணபுரம், அய்யர் பங்களா, திருப்பாலை உள்ளிட்ட பகுதிகளில் வீதி வீதியாகச் சென்று வாக்கு சேகரித்தார். அப்போது பேசிய அவர், "அதிமுக தனிப்பெரும் இயக்கம், அதன் வரலாறு தெரியாமல் அண்ணாமலை பேசுகிறார். ரத்தம், வியர்வையை சிந்தி வளர்த்த இயக்கத்தை யாரிடமாவது கொண்டு ஒப்படைக்க முடியுமா?

தங்கள் வேட்பாளர் சரவணனோடு விவாதம் செய்ய சு.வெங்கடேசனை அழைத்தோம். ஆனால் அவர் வரவில்லை. 5 ஆண்டுகளில் அவர் மதுரை மக்களவைத் தொகுதிக்கு என்ன செய்தார்?" என கேள்வி எழுப்பினார்".

இதையடுத்து பேசிய வேட்பாளர் சரவணன், "தமிழ்நாட்டில் கடந்த 3 ஆண்டுகளில் விலைவாசி உயர்ந்துள்ளது, போதைப் பொருள் நடமாட்டம் அதிகரித்துள்ளது, சட்டம் ஒழுங்கு சீர்குலைந்துள்ளது. ரவுடியிசம் அதிகரித்துள்ள நிலையில், திமுக ஆட்சிக்கு கடிவாளம் போட மக்களவைத் தேர்தலில் அனைவரும் அதிமுகவை ஆதரிக்க வேண்டும்" என கேட்டுக்கொண்டார்.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow