மயானக்கொள்ளை திருவிழா கோலாகலம்... பிரசாதத்தை கொள்ளையடித்து சாமிதரிசனம் !!
தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளில் மயானக் கொள்ளை திருவிழா வெகு விமர்சையாக நடைபெற்றது.
ஆண்டுதோறும் மகா சிவராத்திரி தினத்தின் மறுநாள் தமிழ்நாட்டில் அங்காளம்மன் கோயில்களில் மயானக் கொள்ளை திருவிழா நடைபெறுவது வழக்கம். அந்த வகையில் மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடியை அடுத்த முடிதிருச்சம்பள்ளியில் அமைந்துள்ள அங்காள பரமேஸ்வரி ஆலயத்தில் மயானக் கொள்ளை திருவிழா வெகு விமர்சையாக நடைபெற்றது. வீதியுலாவாக அங்காளம்மன், வீரபத்திரர் உள்ளிட்ட சுவாமிகள் மயனாத்திற்கு கொண்டு வரப்பட்டு தீபாரதனை காண்பிக்கப்பட்டது. தொடர்ந்து கிழங்கு படையலை பேச்சாயி வேடமணிந்திருந்த பக்தர்கள், சிறுவர்கள் கொள்ளையிடும் மயானக்கொள்ளை திருவிழா நடைபெற்றது. இதில் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு கிழங்கை கொள்ளையடித்து பிரசாரமாக எடுத்துச் சென்றனர்.
இதேபோல் காஞ்சிபுரம் மாநகராட்சிக்குட்பட்ட பெருமாள் தெருவில் உள்ள அங்காள பரமேஸ்வரி அம்மன் ஆலயத்தில் 141 ஆம் ஆண்டு மயானக் கொள்ளை திருவிழா வெகு விமர்சையாக நடைபெற்றது. தொடர்ந்து பலவித மலர்களால் அலங்கரிக்கப்பட்ட அங்காள அம்மன் முக்கிய வீதிகள் வழியாக ஊர்வலமாக எடுத்துச் செல்லப்பட்டார். திருவிழாவை ஒட்டி சில பக்தர்கள் கிரேனில் தொங்கியபடியும், அலகு குத்தியும், காளி வேடங்கள் அணிந்தும் நேர்த்திக்கடன் செலுத்தினர்.
What's Your Reaction?