அதிமுக-பாஜக தொகுதி பங்கீடு: எந்தந்த தொகுதி முழு லிஸ்ட் இதோ!

அதிமுக, பாஜக கூட்டணி அமைத்து சட்டமன்ற தேர்தலை சந்திக்க உள்ளன. இதில் பாஜகவிற்கு 33 தொகுதிகள் வரை அதிமுக ஒதுக்கியுள்ளதாக தெரிகிறது. 

அதிமுக-பாஜக தொகுதி பங்கீடு: எந்தந்த தொகுதி முழு லிஸ்ட் இதோ!
அதிமுக-பாஜக தொகுதி பங்கீடு

கடந்த 2021 சட்டமன்ற தேர்தலின் போது அதிமுக கூட்டணியில் பாஜக இடம் பெற்று இருந்தது. அப்போது 20 தொகுதிகள் மட்டுமே பாஜகவிற்கு அதிமுக வழங்கியது. ஆனால் இந்த முறை 50 தொகுதிகள் வரை வேண்டும் என அதிமுகவிடம் பாஜக வலியுறுத்தி வருகிறது. 

ஆனால் 25 தொகுதி வரை மட்டும் பாஜகவிற்கு அதிமுக ஒதுக்கும் என தெரிகிறது. இந்த நிலையில், அதிமுக பாஜக இடையே தொகுதி பங்கீடு முடிந்துவிட்டதாக கமலாலய வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. அதன்படி, 33 தொகுதிகளுக்கான பொறுப்பாளர்களை பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் நியமித்துள்ளார்.  

அதன்படி அண்ணாமலை: சிங்காநல்லூர், மதுரை தெற்கு, விருகம்பாக்கம், காரைக்குடி, ஸ்ரீவைகுண்டம், பத்மநாபபுரம் ஆகிய தொகுதிகளுக்கும், எல்.முருகன்: திருப்பரங்குன்றம், ராதாபுரம், வால்பாறை, திருப்பூர் வடக்கு, உதகமண்டலம் ஆகிய 5 தொகுதிகளுக்கு நியமிக்கப்பட்டுள்ளனர். 

அதே போன்று வானசி சீனிவாசன்: திருப்பூர் தெற்கு, குன்னூர், கோயம்புத்தூர் தெற்கு ஆகிய 3 தொகுதிக்கும், தமிழிசை சௌந்திரராஜன்: கும்மிடிபூண்டி, மயிலாப்பூர், நாங்குநேரி, பொள்ளாச்சி, கிளியூர் ஆகிய 5 தொகுதிக்கும் நியமிக்கப்பட்டுள்ளார். 

எச்.ராஜா: முதுகுளத்தூர், விளவன்கோடு, திருப்பதூர், சிவகங்கை, உடுமலைப்பேட்டை ஆகிய தொகுதிக்கும்,  வி.பி. துரைசாமி: எழும்பூர், ராசிபுரம், பரமத்திவேலூர் 3 தொகுதிகளுக்கும்,  பொன். ராதாகிருஷ்ணன்: தென்காசி, பரமக்குடி, மேட்டுப்பாளம், பழனி  என 33 தொகுதிகளுக்கு பொறுப்பாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். 

இந்த தொகுதிகளில் பாஜக வேட்பாளர்கள் அதிமுக கூட்டணியில் போட்டியிடுவார்கள் என கமலாலய வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. 

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow