பாஜக பெண்களுக்கு எதிரான ஆட்சி... கனிமொழி எம்.பி., ஆவேசம்...
தேசத்தில் பெண்களுக்கு பாதுகாப்பற்ற சூழல் உருவாகியுள்ளதாக தூத்துக்குடி எம்.பி கனிமொழி தெரிவித்துள்ளார்.
தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளத்தில் திமுக மகளிரணி, மற்றும் மகளிரணி தொண்டர் அணி ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இதில் தூத்துக்குடி நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி, அமைச்சர் கீதா ஜீவன் மற்றும் சட்டமன்ற உறுப்பினர் மார்க்கண்டேயன் ஆகியோர் கலந்து கொண்டனர்.
கூட்டத்தில் பேசிய கனிமொழி எம்.பி., திமுக ஆட்சியில் பெண்களுக்கு தரப்பட்ட வாக்குறுதிகள் நிறைவேற்றப்பட்டுள்ளதாகவும், திமுக ஆட்சி பெண்களுக்கான ஆட்சி, பெண்கள் நலம், அவர்கள் உரிமைகளை நிறைவேற்றிய ஆட்சி எனவும் கூறினார். ஆனால் பாஜக ஆட்சி பெண்களுக்கு எதிரான ஆட்சி எனவும், பாஜக பெண்களுக்கு பாதுகாப்பு இல்லாத நிலையை உருவாக்கி வருவதாகவும் பொய்யை உண்மை போன்று பாஜகவினர் பேசுவதாகவும் அவர் சாடினார். மேலும் நாடாளுமன்றத்தில் 33 சதவீதம் இடஒதுக்கீடு சட்டம் கொண்டு வந்தாலும், சில சட்டங்களை இயற்றி அதன் மூலம் தடை கொண்டு வந்திருப்பதாக குற்றம் சாட்டிய கனிமொழி, அதிமுக, பாஜக வாக்கு சேகரிக்க வரும்போது கேள்வி கேளுங்கள், மீண்டும் மீண்டும் இங்கு வந்து மக்களை ஏமாற்றி விடலாம் என பாஜகவினர் நினைப்பதாகவும் அவர் கூறினார்.
What's Your Reaction?