எடப்பாடி பழனிசாமி இல்லாத அதிமுக மீண்டும் உருவாகும்!.. திட்டவட்டமாக தெரிவித்த ஓ.பி.எஸ்!!

Feb 24, 2024 - 21:27
எடப்பாடி பழனிசாமி இல்லாத அதிமுக மீண்டும் உருவாகும்!.. திட்டவட்டமாக தெரிவித்த ஓ.பி.எஸ்!!

எடப்பாடி பழனிசாமி இல்லாத அதிமுகவை உருவாக்குவோம் என்று ஓ.பன்னீர் செல்வமும், துரோக சக்தி பழனிசாமி கம்பெனியை அரசியல் ரீதியாக முறியடிக்காமல் ஓயமாட்டோம் என்று டிடிவி தினகரனும் தெரிவித்துள்ளனர். 

முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் 76-வது பிறந்தநாளையொட்டி அமமுக சார்பில் தேனி மாவட்டம், பங்களா மேடு பகுதியில் பொதுகூட்டம் நடைபெற்றது. இதில் அமமுக பொதுச் செயலாளர் டிடிவி தினகரன், முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர் செல்வம், ஓ.பி.ரவீந்திரநாத் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். 

பொதுக் கூட்டத்தில் பேசிய ஓ.பன்னீர் செல்வம், ஊர்ந்து ஊர்ந்து வந்து சசிகலா மூலம் முதலமைச்சர் பதவியை எடப்பாடி பழனிசாமி வாங்கியதாக விமர்சித்தார். அதிமுகவை மீட்கும் முயற்சியில் தானும், டிடிவி தினகரனும் ஈடுபட்டுள்ளதாகவும், அதனை முழுமையாக நிறைவேற்றுவோம் என்றும் அவர் கூறினார். மேலும் அதிமுகவை எடப்பாடி பழினிசாமியிடம் இருந்து மீட்டு தொண்டர்களிடம் ஒப்படைப்போம் என்றும், எடப்பாடி பழனிசாமி இல்லாத அதிமுகவை மீண்டும் உருவாக்குவோம் என்றும் பன்னீர் செல்வம் சூளுரைத்தார்.

தொடர்ந்து பேசிய அமமுக பொதுச் செயலாளர் டிடிவி தினகரன், பதவிக்காக யார் காலிலும் விழாதவன் நான் என்று மறைமுகமாக எடப்பாடி பழனிசாமியை சாடினார். தேர்தலின் போது அளித்த வாக்குறுதிகளில் 10 சதவீதம் கூட திமுக அரசு நிறைவேற்றவில்லை என குற்றஞ்சாட்டிய டிடிவி தினகரன், நாள் தோறும் ஆசிரியர்கள், மருத்துவர்கள், மாற்றுத்திறனாளிகள் என அனைத்து தரப்பினரும் போராட்டத்தில் ஈடுபட்டு வருவதால்  வரும் நாடாளுமன்ற தேர்தலில் திமுக கூட்டணிக்கு, மக்கள் மரண அடி கொடுப்பார்கள் என சாடினார். திமுகவுடன் எடப்பாடி பழனிசாமி மறைமுக கூட்டணி வைத்திருப்பதாகவும், தீய சக்தி திமுகவையும், துரோக சக்தி பழனிசாமி கம்பெனியையும் அரசியல் ரீதியாக முறியடிக்காமல் ஓயமாட்டோம் என டிடிவி தினகரன் திட்டவட்டமாக தெரிவித்தார்.

மேலும் படிக்க :

https://kumudam.com/IUML-in-Ramanathapuram-and-Communist-Party-of-India.-Namakkal-too-competition...-DMK-alliance-agreement

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow