என்டிஏ கூட்டணியில் அமமுக:அந்தர் பல்டி அடித்த தினகரன்:30 நாளில் முடிவை மாற்றிய மர்மம்
எடப்பாடி பழனிசாமியை முதல்வர் வேட்பாளராக ஏற்க முடியாத என கடுமையாக விமர்சனம் செய்து வந்த தினகரன், 30 நாளில் அந்த பல்டி அடித்து மீண்டும் என்டிஏ கூட்டணியில் அமமுக இணைவதாக தினகரன் அறிவித்துள்ளார்.
அதிமுக–பாஜக கூட்டணியில் இன்னும் சில கட்சிகள் இணைவார்கள் என கூறியிருந்த எடப்பாடி பழனிசாமி, டிடிவி தினகரன் தொடர்பான கூட்டணி கேள்விக்கு நேரடி மறுப்பு அளிக்கவில்லை. இதே நேரத்தில், டெல்லியில் அமித் ஷாவை தினகரன் நேரில் சந்தித்ததாக தகவல் பரவி வந்தன.
பாமக அன்புமணி தரப்பு கூட்டணியில் இணைந்த பின்னர், அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி உடனடியாக டெல்லி சென்று உள்துறை அமைச்சர் அமித்ஷாவை சந்தித்து பேசியார். தமிழ்நாட்டின் தற்போதைய அரசியல் நிலவரம் குறித்து விளக்கிக் கூறியதாகவும், கூட்டணிக்கு அதிமுகவே தலைமை வகிக்கும் என்பதை அவர் உறுதிப்படுத்தினார்.
எடப்பாடியை முதல்வர் வேட்பாளராக ஏற்க முடியாது என தினகரன் பேசியதோடு, கடுமையான விமர்சனம் செய்து இருந்தார். அதுமட்டுமின்றி தவெக தலைவர் விஜய் புகழ்ந்து, அவருக்கு ஆதரவாகவும் தொடர்ந்து கருத்து தெரிவித்து வந்தார். இந்நிலையில், டிடிவி தினகரன் பெங்களூரு வழியாக டெல்லி சென்றதாகவும், அவர் அமித்ஷாவை சந்தித்து தேசிய ஜனநாயக கூட்டணியில் மீண்டும் சேர்வதற்கான பேச்சுவார்த்தை நடந்ததாகவும் தகவல்கள் வெளியாகின.
இந்நிலையில், அடையாறில் உள்ள அமமுக அலுவலகத்தில் நிர்வாகிகளுடன் இன்று தினகரன் ஆலோசனை நடத்தினர். இதற்கு பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர், என்டிஏ கூட்டணியில் மீண்டும் இணைவதாகவும், ஜெயலலிதா ஆட்சியை மீண்டும் கொண்டு வர ஒரணியில் திரள்வதாகவும் தெரிவித்தார். விட்டு கொடுப்பவர்கள் கெட்டு போகமாட்டார்கள் என கூறி அவர், மத்திய அமைச்சர் பியூஷ் கோயலை சந்தித்து கூட்டணியை உறுதிப்படுத்த புறப்பட்டார்.
What's Your Reaction?

